குளிர் தாங்க முடியாததால் வேறு வழியின்றி பிரபல நடிகையை கட்டிப்பிடித்த அஜித்.! ஷூட்டிங் ஸ்பார்ட்டில் நடந்த சம்பவம்..

ajith-
ajith-

சினிமாவிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி ஒரே மாதிரியாக நடந்துகொள்பவர் தான் நடிகர் அஜித். அதனால் தான் ரசிகர்கள் அவரை படத்தையும் தாண்டி அவரை ஒரு நல்ல மனிதராக பார்ப்பதால் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். இருபின்னும் தான் செய்யும் வேலையில் no.1 – ன்னாக வலம் வர போராடுகிறார்.

ஆரம்பத்தில் காலடி எடுத்து வைத்த போது நடிகர் அஜித்குமார் நம்பர் ஒன் நடிகராக வேண்டும் என்பதை ஆசை அதை அவரே பல பேட்டிகளில் கூறி யுள்ளார் அதற்கு ஏற்றவாறு ஆரம்பத்தில் பத்திரிக்கையாளர்களை சந்திப்பது, ரசிகர்களை சந்திப்பதுமாக இருந்து வந்துள்ளார் ஆனால் அதே அளவு நாளுக்கு நாள் இவரைப் பற்றிய சர்ச்சைகளும் வெடிக்க ஆரம்பித்து.

ஒரு கட்டத்தில் நடிகர் அஜித்குமார் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் என எல்லாவற்றையும் தவிர்த்து  படங்களில் நடிப்பதை மட்டுமே வேலையாக வைத்தார். ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு சிறப்பான படங்களை கொடுத்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

அந்த வகையில் விக்ரமன் இயக்கத்தில் உருவான உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்னும் படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்து இருப்பார் இந்த படத்தில் கார்த்திக், ரோஜா ஆகியவர்கள் நாயன், நாயகிகளாக நடித்து அசத்தியிருப்பார் இந்த படத்தில் ஒரு காட்சியில் நடிகர் அஜித்குமார் மழையில் நனைந்து கொண்டே நடித்திருப்பார். படத்தின் சூட்டிங்கை பார்க்க நடிகை ஹீரா வந்திருந்தார்.

அப்பொழுது குளிர் தாங்க முடியாமல் நடிகர் அஜித்குமார் சூட்டிங் ஸ்பார்ட்டிக்கு வந்த நடிகை ஹீராவை கட்டிப் பிடித்து உள்ளார். இதனால் சூட்டிங் ஸ்பார்ட்டில் இருந்த பலரும் அதிர்ச்சி ஆகியனர் ஆனால் அஜித்தோ யார் பக்கத்தில் இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் கட்டிபிடித்தார். கூச்சப்படாமல் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை வெளிப்படையாக செய்யும் தைரியம் கொண்டவர் குளிர் தாங்க முடியாமல் வேறு வழியில்லாமல் செய்து விட்டாராம். அப்போது உதவி இயக்குனராக பணியாற்றிய ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.