தல அஜித் வடிவேல் பாலாஜி குடும்பத்திற்கு செய்ததை பார்த்து பாராட்டும் ரசிகர்கள்.!! தல தலதான் பா.

0

Ajith helped vadivel balaji family: விஜய் டிவி பிரபலமான காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு 15 நாள் மருத்துவம் பார்த்துள்ளார். பின்பு பணமில்லாத காரணத்தினால் அங்கிருந்து வெளியேறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட மருத்துவமனையில் உயிர் பிரிந்தது.

இதனை அறிந்த அவரது ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என அனைவரும் இவருக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். விஜய் டிவி பிரபலங்கள் அனைவரும் இவரின்  வீட்டிற்கு நேரடியாக சென்று இரங்கல் தெரிவித்து வந்தனர் கடைசி வரை அவர் வீட்டிலேயே இருந்து இறுதி சடங்கு செய்துவிட்டு பின்னர் வீடு திரும்பினர்.

அந்த  வகையில் நடிகர் விஜய் சேதுபதியும் இவரின் வீட்டிற்கு நேரடியாக சென்று அவரின் குடும்பத்திற்கு சிறு உதவியை செய்துவிட்டு இரங்கல் தெரிவித்து விட்டு வந்தார். அவரை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் வடிவேல் பாலாஜியின் குழந்தைகளுக்கான  படிப்பு செலவு முழுவதையும் தானே பார்த்துக் கொள்வதாக  கூறியுள்ளார்.

அவரை தொடர்ந்து தல அஜித் அவரது மேனேஜர் மூலம் வடிவேல் பாலாஜியின் குடும்பத்திற்கு 10 லட்சம் உதவித்தொகை வழங்கியுள்ளார். இதனை அறிந்த அஜித் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனால் இதுவரை விஜய் தொலைக்காட்சி எந்த உதவியும் செய்ததாக தெரியவில்லை.எனவே ரசிகர்கள் விஜய் தொலைக்காட்சி விமர்சித்து வருகிறார்கள்.