கொரோனா பாதிப்பு தடுப்பு பணிக்காக பணத்தை அள்ளிக் கொடுத்த அஜித்.! எவ்வளவு தெரியுமா.?

உலக நாடுகளையே கொரோனா வைரஸ்  நடு நடுங்க வைத்துள்ளது அதனால் பல நாடுகள் இதில் இருந்து எப்படி மீள்வது என ஆலோசித்து வருகிறார்கள், மேலும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது அதேபோல் இப்போது இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோய் பாதிப்பு அதிகரித்து செல்கிறது இந்த நிலையில் பல பிரபலங்கள் கொரோனா நோய் பாதிப்பு நிவாரண நிதியாக நன்கொடை கொடுத்து வருகிறார்கள், அந்த வகையில் முன்னணி நடிகரான தல அஜித் அவர்கள் நன்கொடை கொடுத்துள்ளார்.

தல அஜித் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்சமும் பிரதமர் நிவாரண நிதியில் 50 லட்சமும் அஜித்குமார் உதவியுள்ளார் அதுமட்டுமில்லாமல் பெப்சி தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் 25 லட்சம் நிதி உதவியை கொடுத்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டதால் பிற மக்களும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் உணவுக்காக அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தல அஜித் தற்பொழுது வலிமை திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் ஆதனால் கொரோனா பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு தற்பொழுது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் தீபாவளிக்கு இந்த திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Leave a Comment

Exit mobile version