அஜித் எங்ககிட்ட இருந்து இனி தப்பிக்க வாய்ப்பே இல்லை – பிரபல இயக்குனர்கள்.!

நடிகர் அஜித் அண்மைக்காலமாக தொடர்ந்து இளம் இயக்குனர்களுடன் கைகோர்த்து வாய்ப்பைக் கொடுத்து வருகிறார். அந்த வகையில் அஜித் ஹெச் வினத்துடன் முதல் முறையாக நேர்கொண்ட பார்வை இன்னும் படத்தில் நடித்தார் அதைத் தொடர்ந்து கடைசியாக வலிமை என்னும் படத்திலும் ஹெச் வினோத் உடன் கைகோர்த்து நடித்தார்.

தற்போது மூன்றாவது முறையாக ஹெச் வினோத்துடன் கூட்டணி அமைத்து தனது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த படத்திற்காக அஜித் உடல் எடையை அதிரடியாக குறைந்து செம பிட்டாக நடித்து வருகிறார் என கூறப்படுகிறது. படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டாப் ஹீரோக்கள் ஓரிரு படங்களில் நடித்து வரும்போதே..

அவர்களின் அடுத்த படத்தை புக் செய்ய தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் போட்டி போட்டு கதையை கூறி வருவார்கள். அந்த வகையில் தற்போதும் அஜித்தை சந்தித்து பல இயக்குனர்களும் கதை கூறி தான் வருகின்றனர். அதில் ஒரு சில கதை ரொம்ப அஜித்திற்கு பிடித்த போய்விட்டால் அடுத்த படத்தின் இணையலாம் என உறுதியாக கூறிவிடுகிறார். இல்லையென்றால் இப்போதைக்கு வேண்டாம் என்று தட்டி கழித்து விடுவார்.

அந்த வகையில் தனது 61வது திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியது.  இந்த படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போகும் இயக்குனர் குறித்த தகவலும் வெளிவந்து இருக்கின்றன. இந்த நிலையில் இயக்குனர் புஷ்கர் காயத்ரி தம்பதியினர் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் வேதா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

puskar gayathiri
puskar gayathiri

இந்த படத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தமிழில் வெளியான விக்ரம் வேதா திரைப்படத்தை தொடர்ந்து ஹிந்திலும் இந்த படத்தை புஷ்கர் காயத்ரி இயக்கி வருகின்றனர். இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை புஷ்கர் காயத்ரி இயக்க உள்ளார்கள் என தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை அதனால் பொறுத்திருந்து பார்ப்போம்

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment