விடாமல் துரத்திய ஷங்கர்… விரா மீன் போல் நழுவிச்சென்ற அஜித்.! அதுவும் இத்தனை படங்களா.? வாய் பிளக்கும் கோலிவுட் சினிமா.?

0
ajith
ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் பிரபல இயக்குனர் ஷங்கரின் சில பட வாய்ப்புகளை நிராகரித்திருக்கும் நிலையில் அது குறித்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் அஜித்குமார் நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் இவருடைய நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகி வசூல் வேட்டையை நடத்திய நிலையில் இதனை அடுத்து தற்பொழுது இவர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இது வரையிலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் நடிகர் அஜித் திரைப்படங்கள் நடிப்பது அப்படி இல்லை என்றால் சுற்றுலா செல்வது என எப்பொழுதும் பிசியாக இருந்து வருகிறார். இவரைப்போலவே சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் சங்கர் தொடர்ந்து அடுத்தடுத்த சூப்பர் ஹிட் திரைப்படங்கள் இயக்கி வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது கமலஹாசன் அவர்களை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தினை உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என படப்பொழுவினர்கள் கூறியுள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் இதுவரையிலும் ஷங்கரின் இயக்கத்தில் ஒரு படத்தில் கூட நடிகர் அஜித் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு முறை அஜித்தை வைத்து படம் இயக்க சங்கர் கதை தயார் செய்ததாகவும் ஆனால் ஒவ்வொரு முறையும் அஜித்தால் அவரது கதையில் நடிக்க முடியாமல் போவதாகவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு முறையும் ஷங்கர் கதையை கூறும் பொழுது சில காரணங்களினால் அஜித் அந்த படங்களை தவிர்த்து வருவதாக சமீபத்தில் பிரபல பத்திரிக்கையாளர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.