அஜித்திற்கு இப்படி ஒரு முகம் இருக்கு.. அப்பொழுதே கண்டுபிடித்து சொன்ன விஜயகாந்த் ஆனால் இதை ஏற்க மறுத்த இயக்குனர்.! வைரல் நியூஸ்.

தமிழ் சினிமா ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் தனது விடா முயற்சியின் மூலம் திரை உலகில் நடித்துக்கொண்டு வலம் வருபவர் அஜித். இவர் ஆரம்பத்தில் பல்வேறு விதமான சறுக்கல்களை சந்தித்தாலும் அதன் பிறகு சுதாரித்துக் கொண்டு ஹிட் படங்களைக் கொடுக்க ஆரம்பித்தார் அதிலும் அஜித்தின் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்த ஒவ்வொரு திரைப்படமும் இவருக்கு வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளன.

அந்த வகையில் வில்லன் மற்றும் டபுள் ரோல்  இவருக்கு எப்பொழுதுமே வெற்றியையே தந்துள்ளன அப்படி இவர் நடிப்பில் வெளியாகி பல்வேறு திரைப்படங்கள் இன்றும் மக்களுக்கு பிடித்து போய் உள்ளன. ஆனால் இவர் இதுபோன்று நடிப்பதற்கு முன்பே கேப்டன் விஜயகாந்த் அவரது முகத்தைப் பார்த்து இவருக்கு வில்லன் ரோல் செட் ஆகும் என அஜித்தை வைத்து பட எடுத்த ராசி பட இயக்குனரிடம் அப்பொழுதே சொன்னாராம்.

ஆனால் இயக்குனரோ அஜித்தை ஹீரோயிசம் தான் மிகச் கரெக்டாக இருக்கும் எண்ணி அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம் ஆனால் காலம் கடந்து போக ஒரு கட்டத்தில் வாலி, மங்காத்தா போன்ற வில்லன் ரோல் அவருக்கு கச்சிதமாகவே பொருந்தியது.மேலும் அந்த படங்களும் மாபெரும் வசூல் வேட்டை நடத்தியது அதன்பிறகு விஜயகாந்த் சொன்னது உண்மைதான் என்று அப்போது புரிந்து கொண்டாராம் இயக்குனர்.

விஜயகாந்து திரை உலகில் ஒருவரின் முகத்தை பார்த்தே அவர் நல்லவரா கெட்டவரா என்றும் அவருக்கு எதுவும் வராது என்பதை அப்போதே கணித்து விடுவாராம் அதனாலதான் விஜயகாந்த் படங்கள் பெரும்பாலும் தோல்வியே பெறவில்லை அவரை வைத்து இயக்கும் படங்களின் இயக்குனர்களை பார்த்து சொல்லிவிடுவார் இந்த படம் ஓடும், ஓடாது என்பதை சொல்லிவிடுவாராம்.

அது போல தல அஜித்தை பார்த்து சொன்ன விஷயமும் கரெக்டாக நடந்துவிட்டாதாம்.

Leave a Comment