துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்ளும் அஜித்.! வைரலாகும் புகைப்படம்

0

தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் நடிப்பது மட்டுமில்லாமல், கார் ரேஸ், பைக் ரேஸ், ஆளில்லா விமானம் இயக்குவது, போட்டோகிராபி என பல்வேறு துறைகளில் வரும் காட்டுபவர் அதுமட்டுமில்லாமல் துப்பாக்கி சுடும் உரிமம் வைத்துள்ளார் அஜீத்.

அஜித் சமீபத்தில் மாநில அளவிலான 45வது துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டு தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இந்த நிலையில் தற்பொழுது டெல்லியில் உள்ள டாக்டர் கர்னி சிங் துப்பாக்கி சுடுதல் மைதானத்தில், 10 மீட்டர் கான போட்டியில் கலந்து கொண்டுள்ளார் அதற்காக அஜித் விமான நிலையத்திற்கு புறப்பட்டு செல்லும் வீடியோ மற்றும் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.