Flop படங்களை கொடுக்கும் அஜித் – வெற்றி பார்முலாவுக்கு திரும்ப இதுதான் வழி.! திருப்பூர் சுப்பிரமணியன் காரசார பேச்சு.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இடத்தை பிடிக்க அஜித், விஜய் போன்றவர்கள் முயற்சிக்கின்றனர். இருவரும்  வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து இருக்கின்றனர். குறிப்பாக நடிகர் விஜய் மக்கள் மற்றும் ரசிகர்களை கவர ஆக்சன் கலந்த கமர்சியல் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.

அது அவருக்கு வெற்றியை பெற்று தந்து இருக்கின்றன. விஜய் நடிப்பில் அண்மையில் வெளிவந்த பிகில், மாஸ்டர், பீஸ்ட் ஆகிய அனைத்து படங்களுமே வெற்றி படங்களாக தான் பார்க்கப்படுகிறது. தற்போது கூட தனது 67 வது படமான வாரிசு படத்தில் நடிக்கிறார் இந்த படத்திலும் குடும்பங்களை கவரும் படியான ஒரு குடும்ப கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்

இதனால் விஜய்யின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது ஆனால் அஜித் அப்படி கிடையாது அஜித் தொடர்ந்து ஆக்ஷன் திரைப்படங்களை கொடுத்து பெரும்பாலும் ரசிகர்களை மட்டுமே கவர்கிறார். அதனாலேயே சில அஜித்தின் படங்கள் ஃபிளாப் ஆகின்றன இதிலிருந்து அஜித் மீண்டு வர என்ன செய்ய வேண்டும் என்பதை திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்தை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

விஜய் கமர்சியல் படங்களை கொடுத்து ஆடியன்சை கவர்ந்துவிடுகிறார் ஆனால் அஜித் அப்படி கிடையாது அவர் முழுக்க முழுக்க அண்மைக்காலமாக ஆக்சன் திரைப்படங்களை தேர்வு செய்து நடிக்க அதனால் அவரது படங்கள் தோல்வியை பெறுகின்றன

ஆக்சன் இருந்தாலும் அதில் சென்டிமெண்ட் கலந்த படங்களாக இருந்தால் போதும் அஜித்தின் படங்களும் வெற்றியை ருசிக்கும் அதை அஜித் செய்தால் மட்டுமே போதும் விஜய்யுடன் அவர் போட்டி போடுவார் அது ஒரு ஆரோக்கியமான சண்டையாக சினிமாவில் பார்க்கப்படும் என கூறினார்.

Leave a Comment