தன்னை நம்புவருக்கு பலனை மட்டுமே கொடுப்பவர் அஜித் இப்போ அந்த அதிர்ஷ்டத்தை யாரு கொடுத்துள்ளார் தெரியுமா.!

சினிமாவில் இருக்கும் நடிகர், நடிகைகள் தொடர் ஹிட் படங்களை கொடுக்க முடியாவிட்டாலும் 3 படத்திற்கு ஒரு தடவையாவது ஒரு வெற்றிப்படத்தையாவது  கொடுத்து தன்னை தக்க வைத்துக் கொள்வது வழக்கம்.

ஆனால் ஒரு சில நடிகர்கள் தொடர் தோல்வி படங்களை கொடுத்தாலும் அவருக்கான ரசிகர்கள் அவரை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல் சினிமா உலகில் உச்சத்தில் வைத்து அழகு பார்க்கவும் செய்வார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை விட அதிக தோல்வி படங்களை கொடுத்த தல அஜித்தை மட்டும் அவரது ரசிகர்கள் இன்று வரையிலும் தமிழ் சினிமா உச்சத்திலேயே வைத்து அழகு பார்த்து வருகின்றனர்.

அதற்கு காரணம் இவர் சினிமாவையும் தாண்டி தன்னால் முடிந்த பல திறமைகளை வெளிக்காட்டி ரசிகர்களுக்கு முன்மாதிரியாக இருப்பது மற்றும் அவர்களுக்கு பிடித்த மாதிரியாக இருப்பதால் இவரை பல கோடி பேர் இன்றும் பின்பற்றி வருகின்றனர்.

அது அஜித் இருக்குன்னு தெரியும் தான் சினிமா ரசிகர்களின் மன்றத்தை கலைத்தாலும் தனக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட அஜித்தும் அவர்களுக்கு ஏற்றார்போல சமூக அக்கரை மற்றும் நேர்த்தியான படங்களை கொடுக்க வருகிறார்.

அதன் விளைவாக வருகின்ற ஒவ்வொரு திரைப்படங்களும் ஹிட் அடிப்பதோடு மக்களின் ஆதரவையும் பெற்று வருகிறது.

அந்த வகையில் அஜித் கடைசியாக நேர்கொண்ட பார்வை என்ற சமூக அக்கரை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து இருந்தார் இதைத் தொடர்ந்து தற்போது மிகப்பெரிய ஆக்சன் ஓரிரு காட்சிகள் நிறைந்த “வலிமை”திரைப்படத்தில் மீண்டும் ஹச். வினோத் இயக்கத்தில் உருவாகி வருகிறது.

இப்படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது இத்திரைப்படத்திற்கான போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக்கை அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அஜீத்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி வெளிவரும் என போனிகபூர் சொன்னதையடுத்து ரசிகர்கள் சற்று அமைதியாகி உள்ளனர் இருப்பினும் இன்ச்டா மற்றும் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் தொடர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பை கிளப்பி கொண்டே வருகின்றனர்.

இந்த நிலையில் தல அஜித் தமிழ் சினிமாவையும் தாண்டி மலையாள திரைப்படத்தில் தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தை மோகன்லால் பரோஸ் 3டியில் இயக்குகிறார் இந்த திரைப்படத்தின் பெயர் நிதி காக்கும் பூதம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிருதிவிராஜ் நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு முக்கிய சீனில் அஜீத் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் என்ன வேடம் என்பது தெரியவில்லை.

அஜித் தன்னை நம்புபவர்களுக்கு எப்படி வேண்டுமானாலும் உதவி செய்வார் அந்த வகையில் யார் இந்த படத்திற்கு அழைத்தார்கள் என்னவோ ஒரு முன்னணி நடிகர் என்று கூட பார்க்காமல் இந்த திரைப்படத்தில் அஜித் நடித்து உள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது

Leave a Comment