ராஜமௌலியிடம் நல்ல பெயரை பெற்ற அஜித் – இணையதள பக்கத்தில் வைரலாகும் புதிய வீடியோ

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித், ஹச். வினோத்துடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியது சில நிமிடங்களிலேயே 1 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து அசத்தியது.

தற்போது உலக அளவில் வைரலாகி வருகிறது. இதனால் வலிமை படத்திற்கான எதிர்பார்ப்பு தற்பொழுது வேற லெவலில் எகிறி இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியிருக்கும்  RRR படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்காக சென்னை வந்தது.

டிடி தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சியில் படக்குழு கலந்துகொண்டது அப்போது பல்வேறு பிரபலங்களை பற்றி ராஜமௌலி பேசினார் அவர்களில் ஒருவராக அஜித் குறித்தும் அவர் பேசி இருந்தார்.  அவர் சொன்னது : ராமோஜி பிலிம் சிட்டியில் ஒரு முறை அஜீத்தை சந்தித்தேன் அங்கு ஒரு பெரிய ரெஸ்டாரண்ட் இருக்கும் அங்கு அன்று நிறைய பேர் இல்லை அஜித் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

என்னை பார்த்ததும் அவர் எழுந்து வந்து என்னிடம் நலம் விசாரித்தார் என்னை அழைத்துச் சென்று அவரது டேபிளில் அமர வைத்தார் அதன் பின் என் மனைவி வர அவரையும் எழுந்து நின்று அழைத்து அமர வைத்தார். பின் என் மனைவியிடம் I’m ajith எனக் கூறி அறிமுகப்படுத்திக் கொண்டார். அவரிடம் அதிகம் நாங்கள் பேசினோம் தற்போது அவர் செய்த விஷயம் எனக்கு பெரிதாக அப்படித் உள்ளது.

அதாவது கோடிக்கணக்கான ரசிகர்கள் தல தல என பைத்தியமாக இருக்கிறார்கள். தல என்பதை நீக்கிவிட்டு அஜித்குமார் அல்லது  Ak என்று மட்டும் கூப்பிட சொன்னார் அவருக்கு hats off என ராஜமௌலி சொல்லி இருந்தார். ராஜமௌலி சொன்ன வீடியோ இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment