அஜித் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து விட்டார் – AK 62 இப்படித்தான் இருக்கும்.!

நடிகர் அஜித்குமார் சமீபகாலமாக இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை தூக்கி விடுகிறார் அந்த வகையில் சிறுத்தை சிவாவை தொடர்ந்து ஹச். வினோத்துடன் மூன்றாவது முறையாக கைகோர்த்து துணிவு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். படம் அடுத்த வருடம் பொங்கலை குறி வைத்து ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்த படம் முழுக்க முழுக்க பணத்தைப் பற்றி பேசும் படமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அஜித்தின் அடுத்த திரைப்படமான AK 62 திரைப்படம் குறித்தும் பல தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கிறது AK 62 திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் இல்லாத திரைப்படமாக உருவாகும் என சொல்லப்பட்டது

மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிப்பார் என பல தகவல்கள் வெளிவந்தன இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஏகே 62 படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் சில தகவல்களை பகிர்ந்து உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

நான் இதுவரை ரொமான்ஸ் காமெடி போன்ற படங்களை மட்டுமே இயக்கி உள்ளேன். ஆக்ஷன் பக்கம் போனதில்லை. ஏகே 62 இப்படி தான் இருக்க வேண்டும் என எனக்கு எந்த அழுத்தமும் தரவில்லை முழு சுதந்திரம் கொடுத்துள்ளனர். அஜித்துக்காக எப்படி கதையை அமைக்க வேண்டும் என்று நினைக்கிறாய்.. அதேபோல ஒரு கதையை உருவாக்குங்கள் என கூறியுள்ளனர்.

மேலும் இது அஜித் படம் இப்படித்தான் உருவாக வேண்டும் என எனக்கு யாரும் நிபந்தனையோ அழுத்தமோ கொடுக்கவில்லை எனவும் கூறி உள்ளார். அஜித்துக்காக முற்றிலும் மாறுபட்ட கதையை உருவாக்கி உள்ளேன். இந்த கதை நிச்சயம் ரசிகர்களுக்கும் ரொம்ப பிடிக்கும் என கூறி உள்ளார் இந்த தகவல் தற்பொழுது இணையதள பக்கத்தில் அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment