பிக்பாஸ் பிரபலத்திற்கு வாய்ப்பு கொடுத்த அஜித்.. இணையதளத்தில் சூடுப் பிடிக்கும் புகைப்படம்

Ajith Kumar: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஏராளமான பிரபலங்களுக்கு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது விஜய் மற்றும் அஜித் குமார் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வரும் பிரபலங்களும் இருந்து வரும் நிலையில் இரண்டாவது முறையாக அஜித் தனது படத்தின் நடிப்பதற்கான வாய்ப்பை பிக் பாஸ் பிரபலத்திற்கு கொடுத்துள்ளார் என்பது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான விஜய்யின் வாரிசு படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சம்யுக்தா மற்றும் கணேஷ் வெங்கட்ராம் நடித்திருந்தனர். அதேபோல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடிப்பில் ரிலீஸ்சான துணிவு படத்தில் பாவனி, அமீர், சிபி மூன்று பேரும் நடித்திருந்தார்கள். இதனை அடுத்து சமீபத்தில் விஜய் நடிப்பில் ஆயுத பூஜை முன்னிட்டு வெளியான லியோ படத்தில் நடிகர் விஜய்யிடன் இணைந்து சாண்டி மற்றும் ஜனனிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

சூப்பர் ஹிட் அடித்த ஜெயம் படத்தை பார்த்துவிட்டு ரஜினி என்ன சொன்னார் தெரியுமா.? கடைசியில் சூப்பர் ஸ்டாருக்கு தெரிந்த உண்மை

இவ்வாறு தற்போது விடாமுயற்சி படத்திலும் நடிகர் அஜித்குமார் ஒரு பிக் பாஸ் பிரபலத்திற்கு நடிக்க அனுமதித்துள்ளார். அதாவது பிக் பாஸ் முதல் சீசனின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த டைட்டில் வின்னர் ஆரவ் தான் விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் ஓவியாவை காதலித்து வந்த ஆரவ் பிறகு பிரேக் அப் செய்துக் கொண்ட நிலையில் ராஹி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ், ராஜா பீமா போன்ற படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

2023-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கோலிவுட் நடிகைகள்.! ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த மாடல் அழகி….

இந்நிலையில் கடைசியாக மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான கழகத் தலைவன் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டினார். தற்பொழுது அஜித்தின் விடாமுயற்சி படத்தினை மகிழ் திருமேனி இயக்கி வரும் நிலையில் இந்த படத்திலும் நடிப்பதற்கான வாய்ப்பை ஆரவ் பெற்றுள்ளார்.

ajith kumar

அப்படி நடிகர் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஆரவ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இப்படி ஒரு வாய்ப்புக்காக 20 வருஷம் காத்துகிட்டு இருந்தேன். நடிகர் அஜித்தை சந்தித்து அவருடன் இணைந்து நடிப்பேன் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என பதிவு செய்துள்ளார்.

Exit mobile version