தனது திறமையை நிரூபிக்கும் கட்டாயத்தில் அஜித்.? கோடிக்கணக்கில் வந்த மிகப்பெரிய ஆஃபர்.!

Ajith : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக இருக்கும் அஜித் வருடத்திற்கு ஒரு படத்தைக் கொடுத்து தனது ரசிகர்களை குஷிப்படுத்து வருகிறார் அந்த வகையில் “துணிவு” படத்தை தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளதாக அவரது பிறந்தநாள் அன்று அறிவிக்கப்பட்டது.

அதன் பிறகு இரண்டு மாதங்கள் ஆகியும் எந்த ஒரு அப்டேட்டும் அதிகாரப்பூர்வமாக வெளிவராமல் இருந்து வந்துள்ளது. அஜித்தும் அடிக்கடி பைக் ரெய்டு சென்று வருவதால் விடாமுயற்சி எப்பொழுது ஆரம்பிக்கும் என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் திரைப் பிரபலங்கள் சொல்வது என்னவென்றால்..

ஆகஸ்ட் 18 விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தொடங்கும் எனவும் அஜித்துடன் இணைந்து தமன்னா, திரிஷா, அர்ஜுன்,, அர்ஜுன் தாஸ் போன்றவர்கள் நடிக்க இருப்பதாகவும் சொல்லி வருகின்றனர். மேலும் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகள் போன்ற இடங்களில் நடைபெற இருப்பதாகவும் கூறி வருகின்றனர். இப்படி இருக்க அஜித்துக்கு ஆஃபர் மேல் ஆஃபர் வந்து கொண்டே இருக்கிறது.

ஆம் அஜித் ஒரு பக்கம் பைக் பிசினஸ் ஒன்றை ஆரம்பிக்க உள்ளார் என கூறப்படுகிறது இந்த நிலையில் அஜித்திற்கு இன்னொரு செம ஆஃபர் வந்துள்ளது அதாவது ட்ரோன் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் அதிகம் ஆர்வம் உடையவர் இவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் ட்ரோன் ஆராய்ச்சி குழுவிற்கு அஜித்குமார் தான் கமெண்டராக இருக்கிறார்.

தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்ட இந்த குழு 2021 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தின் போது குட தக்க்ஷா என்ற  பெயரில் தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றியது இந்த குழுவுக்கு தற்பொழுது ஒரு பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது அதாவது இந்திய ராணுவம் தானாக முன்வந்து இந்த குழுவிடம் 200 ட்ரோன் தயாரிப்பதற்கான இடத்தில் கையெழுத்துட்டு இருக்கிறது.

இதற்கு சுமார் 160 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது அஜித் தலைமையிலான இந்த குழு தற்பொழுது மிகப்பெரிய பொறுப்பில் இருப்பதால் அஜித்தும் இது சம்பந்தமான வேலைகளில் இறங்குவார் என கூறப்படுகிறது. எனவே அஜித் அடுத்தடுத்த படங்களில் நடிப்பது கேள்விக்குறி என ஒரு செய்தி உலாவி கொண்டிருக்கிறது. ஆனால் உறுதியாக சொல்லவில்லை..

Leave a Comment