தனது குடும்பத்துடன் காரில் பறந்த அஜித் – இணையதளத்தில் தீயாய் பரவும் வீடியோ.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் தல அஜித் தற்போது கூட இவர் இயக்குனர் ஹச். வினோத்துடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து “வலிமை” என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக முடிந்து அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. தற்பொழுது வலிமை படத்தின் புரமோஷன் வேலைகளில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று தான் சொல்ல வேண்டும். ஒரு மாத்திற்கு மேல் இருக்கின்ற நிலையில் அதுக்குள் திரையரங்குகளை கைபற்ற ரெடியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் விநியோகஸ்தர்களுக்கு படத்தை கொடுத்த முனைப்பு காட்டி வருகிறது.

படம் வெளிவருவதற்கு முன்பாகவே இதுவரை வலிமை திரைப்படம் 200 கோடியை அள்ளிய உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி என்றால் படம் வெளியாவதற்கு நெருங்க நெருங்க இன்னும் பல கோடிகளை அள்ளும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு இயக்குனருடன் கதையை கேட்டு வருகிறார்.

இந்த நிலையில் அஜித் அடுத்ததாக வினோத் அல்லது சிறுத்தை சிவாவுடன் தான் கைக்கோர்க்க  அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது ஒருபக்கம் இருந்தாலும் தனது குடும்பத்துடன் நிகழ்ச்சி மற்றும் வெளியிடத்திற்கு தனது குடும்பத்தை அழைத்து சென்று என்ஜாய் பண்ணி வருகிறார். மேலும் வாழ்க்கையை சிறப்பாக நடித்து வருகிறார் அஜித்.

கடந்த தீபாவளி மற்றும் ஷாலினியின் பிறந்தநாளான அஜித் சிறப்பாக கொண்டாடிய நிலையில் இப்பகூட அஜித் தனது குடும்பத்துடன் வெளியே வந்து விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த அழகிய வீடியோவை நீங்களே பாருங்கள்.

Leave a Comment