லைக்கா வெளியிட்ட அப்டேட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்த அஜித் ரசிகர்கள்.! என்ன திமிங்கலம் கடைசில இப்படி ஆயிட்டது…

லைக்கா தயாரிக்கும் ஒரு படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என நேற்று அறிவித்திருந்தது அதனால் ரசிகர்கள் ஏகே 62 திரைப்படத்திற்கான அப்டேட்டாக இருக்கும் என்று மிகுந்த உற்சாகத்தில் காத்திருந்தனர் ஆனால் தலைவர் 170 வது படத்தின் அப்டேட்டை லைக்கா நிறுவனம் தற்போது வெளியிட்டு இருக்கிறது இதை பார்த்த அஜித் ரசிகர்கள் கடுப்பில் இருக்கிறார்கள்.

ஏனென்றால் அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தின் அப்டேட் இன்னும் வெளியாகமல் இருக்கிறது இதனால் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ஏகே 62 அப்டேட் குறித்து பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் வியாழன் கிழமை அஜித்தின் செண்டிமெண்ட் நாளாக இருக்கும் நிலையில் நேற்று லைக்கா நிறுவனம் ஒரு அப்டேட்டை வெளியிட்டு இருந்தது. ஆனால் அது ஏகே 62 படத்தின் அப்டேட் கிடையாது.

அந்த வகையில் இன்று வெளியான தலைவர் 170வது படத்தின் இயக்குனர் குறித்த அப்டேட்டை தற்போது லைக்கா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது தலைவர் 170 வது திரைப்படத்தை ஜெய் பீம் திரைப்பட இயக்குனர் ஞானவேல் அவர்கள் இயக்க இருப்பதாக தற்போது லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். தற்போது நடிகர் ரஜினி அவர்கள் நெல்சன் திலிப் குமாருடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து தனது மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார் நடிகர் ரஜினி. இந்த திரைப்படத்தில் நடிக்க 24 கோடி வரை சம்பளம் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை அடுத்து இவருடைய கடைசி திரைப்படமான தலைவர் 170 வது திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கப் போகிறார் என்ற தகவல் அடிபட்டது.

ஆனால் தற்போது லைக்கா நிறுவனம் அறிவித்ததை பார்த்து ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியாகி இருக்கிறார்கள். அதாவது லோகேஷ் கனகராஜ் தான் ரஜினியின் கடைசி படத்தின் இயக்குனர் என்று கூறப்பட்டது ஆனால் தற்போது ஜெய் பீம் படம் இயக்குனர் ஞானவேல் இயக்க இருக்கிறார் என்பதை லைக்கா நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இதோ அந்த அறிவிப்பு.

Leave a Comment