வலிமை கொண்டாட்டம் என்ற பெயரில் பால் பாக்கெட்டுகளை திருடிய அஜித் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ.

valimai
valimai

அஜித்தின் வலிமை படத்தை ரசிகர்கள் பலரும் பேராதரவோடு எதிர்பார்த்து வந்திருந்த நிலையில் இரண்டு வருடங்கள் கழித்து இன்று அதிகாலை அஜித்தின் வலிமை படம் ரிலீஸ் ஆகியது. இந்த படத்தினை அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கி ஹிட் கொடுத்த இயக்குனர் ஹெட்ச் வினோத்.

இயக்கத்தில் அஜித் இரண்டாவது முறையாக கைகோர்த்து இந்த வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து கார்த்திகேயா, குக் வித் கோமாளி புகழ், விஜே மகேஸ்வரி, சைத்ரா ரெட்டி போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த திரைப்படத்தில் இணைந்து உள்ளனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை அஜித்தின் வலிமை இத்திரைப்படம் முதல் ஷோ வெளியான நிலையில் அஜித் ரசிகர்கள் பலரும்.. இந்த படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த பிறகு ஆட்டம் பாட்டம் கும்மாளம் என தியேட்டர் முன் ஒரே ரணகளம் செய்து வருகின்றனர்.

மேலும் இன்று வெளியான அஜித்தின் திரைப்படத்தை காண நேற்று இரவே தியேட்டர் முன்பு வந்து ரசிகர் கூட்டம் குவிந்தனர். மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரின் காருக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்து வந்தனர். இந்த நிலையில் திரையரங்கு முன் ஒரு மோசமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

அந்த வகையில் அதிகாலையில் அந்த சாலையில் வந்த பால் வேனிலிருந்து அஜித் ரசிகர்கள் அஜித் கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதற்காக பால் பாக்கெட்டுகளை திருடி உள்ளனர். இந்த வீடியோ தற்போது டுவிட்டரில் வெளியாகி டிரெண்ட் ஆகி வருகின்றனர். இதோ அந்த வீடியோ.