பத்து தல ஆடியோ லான்ச்சில் அலப்பறை செய்த அஜித் ரசிகர்கள்.. அரங்கை அதிர வைத்த வீடியோ

திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகராக ஜொலிப்பவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து  நெடுஞ்சாலை, ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களை எடுத்து வெற்றி கண்ட இயக்குனர் கிருஷ்ணா உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து சிம்பு.

“பத்து தல”.. திரைப்படத்தில் நடித்துள்ளார். படம் வருகின்ற மார்ச் 30 தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க மணல் மாபியா சம்பந்தப்பட்ட ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது படத்தில் நடிகர் சிம்பு உடன் கைகோர்த்து ப்ரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக்..

கௌதம் வாசுதேவ் மேனன், அணு சித்ரா, சென்றாயன், ரெட்டின் கிங்ஸ்லி.. மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்துள்ளனர்.  அண்மையில் டீசர், டிரைலர் போன்றவை வெளிவந்து வெற்றி பெற்ற நிலையில் நேற்று இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தது நடிகர் சிம்பு புதிய லுக்கில் வந்து என்ட்ரி கொடுத்தார்.

மேடை ஏறிய சிம்பு  நமக்கு பிரச்சனை பண்றதுக்கு நிறைய பேர் இருக்காங்க சமூக வலைதள பக்கத்தில் பேசியது பேசும் பொருளாக மாறியது.  இந்த படத்தில் எனக்கு ஜோடி இல்லை அதேபோல் தான் ரியல் லைஃப்லயும் எனக்கு ஜோடி இல்லை என கூறி தனது வருத்தத்தை தெரிவித்தார்.

ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம்  பத்து தல இசை வெளியீட்டு விழாவில் அஜித் ரசிகர்கள் அலப்பறை செய்துள்ளனர் அதில் அவர்கள் சொன்னது.. அஜித் பெரிய தல என கூறி  அரங்கை அதிரவிட்டனர். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் படும் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.

Leave a Comment