பிரபல நடிகைக்கு நடனமாட சொல்லிக் கொடுத்த அஜித்..! பல வருடம் கழித்து வெளிவரும் உண்மை.

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்தி  வருகிறார் இப்பொழுது கூட இயக்குனர் ஹச். வினோத்துடன் மீண்டும் ஒருமுறை கூட்டணி அமைத்து தனது 61 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதி கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

இதில் அஜித் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏகே 61 முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாகக் கொண்டு உருவாகுவதால் இந்த படத்திலும் ஆக்சன் சீனுக்கு பஞ்சம் இருக்காது என கூறப்படுகிறது.  இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மஞ்சு வாரியர், வீரா, சமுத்திரகனி.

மற்றும் யோகி பாபு, மகாநதி சங்கர், சஞ்சய் தத், அஜய் மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில அஜித் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.

சுந்தர் சி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான திரைப்படம் உன்னை தேடி.. இந்த படத்தில் ஹீரோயின்னாக சினிமா உலகில் அறிமுகமானார் நடிகை மாளவிகா அப்பொழுது இந்த படத்தில் மாளவிகாவிற்கு நடனமாடவே தெரியாதாம். உன்னை தேடி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடும் போது கண்ணா பின்னான்னு ஆடி இருக்கிறார்.

அதை பார்த்து கோபம் அடைந்து நடிகர் அஜித் மாளவிகாவிடம் உடம்பை கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க.. உடம்ப விரைப்பா.. வச்சிக்காதீங்க ஃப்ரீயா விடுங்க கூலா ஆடுங்க.. என நடிகை மாளவிகாவுக்கு அப்பொழுது அட்வைஸ் கொடுத்தாராம். அவர் சொன்னது படி கேட்டு மாளவிகாவும் ஆடினாராம் இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை மாளவிகா ஓபன்னாக கூறினாராம்.

Leave a Comment