அஜித் – ஷாலினியை மட்டும் திருமணம் பண்ணிக்காதே என பலமுறை சொன்ன பிரபல நடிகர்.? அப்படி சொல்ல என்ன காரணம்.

0
ajith and shalini
ajith and shalini

நடிகர் அஜித்குமார் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை தெள்ளத்தெளிவாக செய்யக்கூடிய மனிதர் அது சினிமாவாக இருந்தாலும் சரி, நிஜவாழ்க்கை இருந்தாலும் சரி தனது எண்ணங்களை போல வாழக் கூடியவர். அதனால்தான் இவர் இரண்டிலும் சரியாக இருக்கிறார். அதனால் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்து போயுள்ளது.

தமிழ் சினிமா உலகில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் அஜித்குமார். இவர் சமீப காலமாக நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடிப்பதால் இவருக்கான வரவேற்பு நாளுக்கு நாள் மக்கள் மத்தியிலும், ரசிகர் மத்தியிலும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடுகிறார் அதேபோல நிஜ வாழ்க்கையிலும் தனது மனைவி ஷாலினியுடன் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகிறார்.

அஜித் – ஷாலினி இருவரும் சமூக வலைதள பக்கங்களில் பெரிய அளவு ஈடுபாடு இல்லாமல் இருந்தாலும் அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்துவார் அப்படி அண்மையில் அஜித் நியூ லுக்கில்  தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகியது அதனை தொடர்ந்து அஜித்தின் மச்சினிச்சி அஜித் மற்றும் ஷாலினி நெருங்கியிருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அசத்தினார்.

அஜித் ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்பதை நன்கு புரிந்து கொண்டு நல்ல ஜோடிகளாக வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் ஷாலினியை மட்டும் திருமணம் செய்து விடாதே என்று ஒரு நடிகர் பலமுறை அஜித்திடம் கூறியுள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.

“அமர்க்களம்” திரைப்படத்தில் போது அஜீத்தும்,ஷாலினியும் காதலில் விழுந்து உள்ளனர் அப்பொழுது அந்த படத்தில் நடித்த காமெடி நடிகர் ரமேஷ் கண்ணா செஞ்சி மலைக்கோட்டையில் ஷூட்டிங் நடைபெற்ற பொழுது அஜித்திடம் நீ ஷாலினியை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என கூறியுள்ளார் அவர் அவ்வாறு கூற காரணம் இருவரும் சினிமா உலகில் இருக்கிறீர்கள் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் யாரேனும் ஒருவர் சினிமாவை விட்டு விலகி குடும்பத்தை பார்க்க நேரிடும் என கூறியுள்ளார்.

ramesh kanna
ramesh kanna

இதை பலமுறை அஜித்திடம் ரமேஷ்கண்ணா கூறியுள்ளார். ஆனால் அஜித்-ஷாலினி மேலிருந்த அதீத காதல் காரணமாக அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை அமர்க்களம் படம் முடிந்த பிறகு ஷாலினி இருவரும் திருமணம் செய்து கொண்டனர் அதன்பின்  ஷாலினி சினிமாவை விட்டு விலகிய குடும்பத்தை பார்க்க சென்றாராம்.