தல அஜித் அப்பா அம்மாவை பார்துள்ளீர்களா.! இதோ வைரலாகும் புகைப்படம்…

குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமாகி இன்று திரையுலகில் சிறந்த நடிகராக கொடிகட்டி பறக்கும் நடிகர் தல அஜித் ஆவார். இவர் தற்பொழுது உள்ள இளைஞர்களின் ரோல் மாடலாக திகழ்கிறார் ஏனென்றால் திரையுலகில் யாருடைய உதவியும் இல்லாமல் தனது கடின உழைப்பால் முன்னேறி சிறந்த நடிகராக திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் முதலில் கதாநாயகனாக தெலுங்கில் 1991இல் அறிமுகமாக இருந்தபொழுது அப்படத்தின் இயக்குனர் மரணமடைந்ததால் அப்படத்தில் நடிக்காமல் போகிவிட்டது. அதற்கு அடுத்ததாக பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அமராவதி, பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே உட்பட இன்னும் ஏராளமான படங்களில் நடித்து பிரபலம் அடைந்துள்ளார்.

இந்தநிலையில் அமர்க்களம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே அஜித்திற்கு ஜோடியாக நடித்த ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும் இவர்களுக்கு அனுஷ்கா என்ற பெண் குழந்தையும் ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

Valimai-movie-Ajith-brother-Jodi

தல அஜித் சுப்ரமணியம், மோகினி இவர்களின் மகன் ஆவார். அஜித்திற்கு ஒரு அண்ணனும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அஜித்தின் பெற்றோர்களை பெரும்பாலும் யாராலும் பார்த்திருக்க முடியாது இந்த நிலையில் அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் தற்போது அஜித் பெற்றோர்களுடன் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர்கள்தான் தல அஜித்தின் அம்மா அப்பா வா என வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

ajith family

இப்புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

ajith family
ajith family

Leave a Comment

Exit mobile version