தல அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருக்கிறது. இறுதி கட்ட படப்பிடிப்பை ஸ்பெயின் நாட்டில் எடுக்க இருப்பதால் அங்கிருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்பதால் தாமதமாகிறது.
அதனால் இதற்கிடையில் வலிமை திரைப்படத்தின் வேலையை விரைவாக முடித்து விடலாம் என அஜீத் வினோத்திடம் கூறியுள்ளார். அதனால் வலிமை திரைப்படத்தின் வேலைகளை சத்தமே இல்லாமல் முடித்து விட்டாராம் அஜித். வலிமை திரைப்படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளதால் வினோத் அவர்களுக்கு அஜித் அவர்கள் அடுத்த திரைப்படத்தையும் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நீண்ட காலமாக இழுவையில் இருப்பதால் கொஞ்சம் மன வருத்தத்தில் இருக்கிறாராம் அஜித். மேலும் அஜித் திரைப்பயணத்தில் அதிக நாட்கள் படமாக்கப்பட்ட திரைப்படம் என்றால் வலிமை தான் என கூறும் அளவிற்கு நீண்ட காலமாகிவிட்டது.
ஸ்பெயின் நாட்டின் அனுமதி கிடைக்கும் வரை சும்மா இல்லாமல் இதுவரை வலிமை திரைப்படத்தில் தான் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டாராம் அஜித். இந்த நிலையில் அஜித்தின் பிறந்த நாள் மே 1 அன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

அதனால் ரசிகர்கள் ஃபர்ஸ்ட்லுக் வருகைக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.