பாவனிக்காக தன்னுடைய டான்சில் வேண்டுமென்றே சொதப்பிய அஜித்.! நடுக்கடலில் மாட்டிக் கொண்டு முழித்த அமீர் மற்றும் மஞ்சு வாரியர்..

0
ajith, amirr,bhavani
ajith, amirr,bhavani

நடன இயக்குனராக சினிமாவிற்கு அறிமுகமாகி பெரிதாக பிரபலம் அடைய முடியாமல் இருந்து வந்தவர் தான் அமீர் இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த டான்ஸ் ரியாலிட்டி ஷோ மூலம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் பிறகு இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் சீசன் 5வது நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்த இவர் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்று வந்த சின்னத்திரை நடிகை பாவனியை உருக உருக காதலித்து வந்தார்.

பாவனி இதனை ஏற்றுக் கொள்ள யோசித்தாலும் தன்னுடைய முயற்சியை விடாமல் அமீர் தொடர்ந்தது தன்னுடைய காதலை வெளிப்படுத்தி வந்தார் இந்நிகழ்ச்சிருக்கு பிறகு வெளியில் வந்தவுடன் அமீர் பாவனி இருவரும் இணைந்து டிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடனமாடி வந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்த காதல் ஜோடிகளுக்கு அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படத்தின் நடிப்பதற்கான முக்கிய வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்தில் அமீர், பாவனி இவர்களை தொடர்ந்த அதே சீசனில் பங்கு பெற்ற சிபி மூவரும் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளார்கள் எனவே தற்போது துணிவு திரைப்படம் வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன்காக ஏராளமான பிராபலங்கள் பல சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார்கள்.

அந்த வகையில் அமீர், பாவனி இருவரும் சமீப பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நிலையில் அதில் அமீர் தன்னை அஜித்குமார் என்று அறிமுகம் செய்து கொண்டதாகவும் பிறகு அமீரை தன் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டாராம் ஆரம்பத்தில் இப்படித்தான் நர்வசாக இருக்கும் போக போக சரியாகிவிடும் என்றும் கூறிவிட்டு கடைசி வரை ஒரு காம்போர்ட் நிலையில் அவர்களை வைத்துக் கொண்டாராம்.

மேலும் அவர்களிடம் உங்களுக்கு எது வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள் நான் எப்பொழுதும் இருக்கின்றேன் என்று கூறினாராம். பிறகு அமீர், பாவனி, சிபியை நைட் டின்னருக்கு தொலைபேசியின் மூலம் அழைத்த வர சொன்னாராம் ரெஸ்டாரண்டில் அமர்ந்து இரண்டு மணி நேரம் வாழ்க்கை எப்படி தொடங்க வேண்டும்.? எப்படி சிக்கனமாக செலவு செய்ய வேண்டும்? எப்படி கொண்டு போக வேண்டும் என ஏராளமான ஆலோசனைகளை வழங்கினாராம் நடிகர் அஜித்.

பிறகு நடுக்கடலில் போட் சீன் முடித்துவிட்டு வந்த தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லாம் போய்விட்டார்களாம் அந்த சின்ன போட்டியில் அமீர் ஒரு பக்கம், பாவனி ஒரு பக்கம், மஞ்சு வாரியர் ஒரு பக்கம் எப்படி கரையை கடப்பது என்று தெரியாமல் இருந்து வந்த நிலையில் அப்பொழுது அஜித் வந்து ஒரு சுற்று சுற்றி வந்து என்னை பாலோ செய்யுங்கள் எனக் கூறியவர்களை அழைத்து சென்றாராம்.

ajith 2
ajith 2

பிறகு பாவனி டான்ஸ் காட்சியில் சில டேக்குகள் சென்ற நிலையில் இதனை தெரிந்து கொண்ட அஜித் பவானிக்காக அவரும் டான்சில் சுதப்புவது போல் செய்தாராம் எனவே இந்த நேரத்தில் பாவனியை தன்னை தயாராகி கொண்டுள்ளார் இவ்வாறு பல தகவல்களை அமீர், பாவனி பகிர்ந்துள்ளனர்.