வெளியான அஜித் மகளின் வீடியோவால் மிரளும் ரசிகர்கள்.!

ajith like
ajith like

ajith daughter : தல அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருபவர் இவர் கோடான கோடி ரசிகர்களின் பாச பிணைப்பில் இருக்கிறார், சமீப காலமாக அஜித் நடிப்பில் வெளியாகிய திரைப்படங்கள் அனைத்தும் மெகா ஹிட் அடைவது நமக்கு தெரிந்தது.

இந்நிலையில் தற்போது அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது, இந்த திரைப்படம் கொரோனா வருடங்கள் படப்பிடிப்பு தடைப்பட்டது, தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது, தல அஜித் சினிமாவைத் தாண்டி தனது குடும்பம் மற்றும் குழந்தைகளுக்காக அதிக நேரம் செலவிடுவார். அஜித்திற்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்.

அஜித்தின் மகள் அஜித்தை போல் பல திறமைகளைக் கொண்டவர், இந்த நிலையில் தல அஜித்தின் மகள் அனோஷ்கா நண்பர்களுடன் பேஸ்கட்பால் விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதை அஜித் ரசிகர்கள் பெரும்பாலும் வைரல் ஆக்கி வருகிறார்கள், அஜித் ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த வீடியோவில் ஆறாம் நம்பர் ஜெர்சி அணிந்து விளையாடுபவர் தான் அஜித்தின் மகள்.

இந்த வீடியோவில் அஜித் மகள் சீறிப்பாய்ந்து பேஸ்கட்பால் விளையாடுவதால் அதை பார்த்த ரசிகர்கள் அப்பாவையே மிஞ்சி விடுவார் என புகழ்ந்து வருகிறார்கள்.