‘மங்காத்தா 2’படத்தின் தகவலால் வெங்கட் பிரபுவை கண்டித்த அஜித்.!

அஜித் நடிப்பில் வெளிவரும் ஏராளமான திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றினை பெற்று வரும் நிலையில் அந்த திரைப்படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆனாலும் அந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகத்திற்கு ரசிகர்கள் காத்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.அந்த வகையில் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் அஜித் கூட்டணியில் வெளியான திரைப்படம் தான் மங்காத்தா.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வசூல் வேட்டையை நடத்தியது முதல் பாகம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதால் இரண்டாவது பாகத்திற்காக மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள் மங்காத்தா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு வேறு ஏதாவது கதை இருக்கிறதா என வெங்கட் பிரபுவிடம் அஜித் கேட்டுள்ளார் .

அதற்கு வெங்கட் பிரபு தன்னிடம் கதை இல்லை என்று கூறினாராம் இப்படிப்பட்ட நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி நீண்ட வருடங்கள் ஆனாலும் தற்போது வரையிலும் அஜித் மற்றும் வெங்கட் பிரபுவின் கூட்டணியில் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை சமீப காலங்களாக சோசியல் மீடியாவில் மங்காத்தா திரைப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருப்பதக வெளியாகி வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் விஜய், அஜித் இருவரும் இணைந்து நடித்து வருவதாகவும் தகவல் பரவி வந்த நிலையில் பல பேட்டிகளில் வெங்கட் பிரபு மங்காத்தா 2 படம் வருமா என்று கேட்டால் அதற்கு நான் ரெடி அஜித் சார் தான் ஓகே சொல்ல வேண்டும் என கூறி வருகிறார். அவர் ஓகே சொன்னால் உடனே பண்ணிடலாம் என்று கூறி வரும் நிலையில் இவர் கூறியதை அஜித் பல பேட்டிகளில் பார்த்து விட்டாராம்.

உடனே வெங்கட் பிரபுவிடம் மங்காத்தா இரண்டாம் பாகம் கேட்டா நீ என்னை மாட்டி விடுகிறாயா என்று கண்டித்து கொண்டாராம்.இதனை எடுத்து சமீப காலங்களாக வெங்கட் பிரபு எந்த ஒரு பேட்டியிலும் பெரிதாக இதனை பற்றி வாயை திறப்பது இல்லை இவ்வாறு தற்பொழுது அஜித் தன்னுடைய 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் வெங்கட் பிரபு நாக சைதன்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறான் என்பதை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment