கல்லூரி படிக்கும் விஜயின் புகைப்படத்தை பகிர்ந்த அவரது நண்பர். ! வைரலாகும் புகைப்படம்

Vijay collage photos : தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் இவர் தற்பொழுது வசூல் மன்னனாக வலம் வருகிறார், சமீபகாலமாக விஜய் திரைப்படங்கள் பல கோடி வசூல் செய்வது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதுமட்டுமில்லாமல் பாலிவுட் திரைப்படத்திற்கு நிகரான வசூலை விஜய்திரைப்படம் பெற்று வருகிறது.

இந்த நிலையில் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது அதுமட்டுமில்லாமல் வாத்தி கம்மிங் பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி பல சாதனைகளை நிகழ்த்தியது.

விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர் கூட்டம் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அதனால் விஜய்யின் புகைப்படம் ஏதாவது இணையதளத்தில் வெளியானால், அதை ரசிகர்கள் ஷேர் செய்து ட்ரண்ட் செய்து விடுவார்கள், அந்த வகையில் தற்போது விஜய்யின் நண்பரான சஞ்சீவ் விஜய் கல்லூரி படிக்கும் போது எடுத்த புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படம் இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது அதுமட்டுமில்லாமல் இது விஜய் தானா என ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள் ஏன் என்றால் அந்த அளவு விஜய் ஒல்லியாகவும் மிகவும் ஸ்டைலாக இருக்கிறார்.

சஞ்சீவ் விஜய் இருவருமே நீண்டகால நண்பர்கள் ஆவார்கள்.

vijay-college-tamil360newz
vijay-college-tamil360newz

Leave a Comment