தனது ரசிகர்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய தல அஜித்.!இணையதளத்தில் வெளிவந்த புகைப்படம் இதோ.!

வெள்ளித்திரையில் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர் தான் தல அஜித் இவர் நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

வலிமை திரைப்படத்தை நேர்கொண்டபார்வை இயக்கிய இயக்குனர் எச்.வினோத் தான் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள் தயாரித்து வருகிறார்கள்.

இதனையடுத்து தல அஜித் ரசிகர்கள் வலிமை திரைப்படத்தில் இருந்து ஏதாவது ஒரு அப்டேட் வெளிவருமா என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.ஹைதராபாத்தில் படம் நடந்து வந்த நிலையில் அங்கு முடிவடைந்து தற்போது சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது என தகவல் கிடைத்துள்ளது.

சமீபத்தில் பொங்கல் பண்டிகையை சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் கொண்டாடிய புகைப்படத்தை நாம் சமூக வலைதள பக்கங்களில் பார்த்திருப்போம் அதேபோல் தல அஜித்தும் ஒரு சில வருடங்களுக்கு முன்பு தனது ரசிகர்கள் மற்றும் பொது மக்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளார் அப் பொழுது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இவரது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

ajith

Leave a Comment

Exit mobile version