விலை உயர்ந்த 8 பைக்குகளை வாங்கிய அஜித்.? அதன் மதிப்பு மட்டுமே இத்தனை கோடியா.?

ajith
ajith

நடிகர் அஜித்குமார் திரையுலகில் இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதில் பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் தான் ஏன் கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த துணிவு திரைப்படம் கூட அதிக நாட்கள் ஓடி 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி  பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.

அதை தொடர்ந்து அடுத்ததாக லைக்கா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார். இந்த படத்திற்கான முதல் கட்ட ஷூட்டிங் இந்த மாதம் இறுதியில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் சினிமா நேரம் போக..

மீதி கிடைக்கின்ற நேரங்களில் தனக்கு எது தோன்றுகிறதோ அதை திருப்திகரமாக செய்து வருகிறார் அண்மையில் துப்பாக்கிச் சுடுதலில் தனது திறமையை வெளிப்படுத்தி பல தங்கப் பதக்கங்களை அள்ளிய நிலையில் அடுத்ததாக இந்தியா முழுவதும் பைக் பயணம் மேற்கொண்டு வருகிறார் அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கூட அண்மையில் வெளிவந்து ரசிகர்களை கொண்டாட வைத்தது.

இந்த நிலையில் அஜித் ஒரு புதிய முடிவையும் எடுத்துள்ளார் அதாவது..  உலகம் முழுக்க பைக்கில் சுற்றுலா சென்று வரும் அவர் தற்பொழுது இது போன்ற ஆர்வம் மிக்க இளைஞர்களுக்காக அஜித் பைக் ரேட் என்ற நிறுவனத்தை தொடங்க உள்ளார் பைக்கில் சுற்றுலா செல்ல விரும்பும் இளைஞர்களுக்கு இந்த நிறுவனம் பைக் வழங்கி வழிகாட்டும்..

இந்த நிறுவனத்திற்காக அஜித் முதல் கட்டமாக சுமார் 8 பைக்குகளை ஆர்டர் கொடுத்துள்ளார் ஒவ்வொரு பைக்கின் விலை சுமார் ஒரு கோடி இருக்கும் என கூறப்படுகிறது. அடுத்ததாக பைக் ரேஸ் கிளப் ஒன்றையும் அஜித் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது இந்த தகவல்கள் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகின்றன.