கோடிக்கணக்கில் காசை போட்டு பிரமாண்டமான முறையில் புதிய வீட்டை கட்டும் வரும் அஜித் – வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் அஜித் ரசிகர்களுக்கு பல நல்ல திரைப்படங்களை கொடுத்து வருகிறார். அஜித்தின் நேர்கொண்ட பார்வை விசுவாசம் வேதாளம் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த வலிமை திரைப்படம்.

திரையரங்கில் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு சிறந்த படமாக இருந்தது வசூல் ரீதியாகவும் 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை இதுவரை தமிழில் வந்த திரைப்படங்களையே ஓவர்டேக் செய்து முன்னிலையில் இருக்கிறது.

இந்த படத்தை தொடர்ந்து அஜித் தனது 61-வது படத்திலும் கமிட்டாகியுள்ளார் அந்த படத்தை வலிமை படத்தை இயக்கிய அதே குழுவுடன் மீண்டும் ஒருமுறை பயணிக்க உள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பும் சில மாதங்களிலே முடிந்து அஜித் அடுத்து அஜித்தின் 62வது திரைப்படத்திலும் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி அஜித்தின் 62வது திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார் மற்றும் லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் அஜித்தின் சம்பளம் சற்று அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர் அஜித் வசித்து வரும் வீட்டின் புகைப்படங்கள் நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

ஆனால் அஜித் தற்போது புதிதாக ஒரு வீடு கட்டி வருகிறாராம். அந்த வீட்டின் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அஜித் கட்டி வரும் அந்த புதிய வீட்டின்  புகைப்படத்தை தற்போது அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

ajith house
ajith house
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment