தல பிறந்தநாளுக்கு தனுஷ் கொடுக்கும் செம ட்ரீட்.! ரசிகர்கள் மகிழ்ச்சியில்.!

தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் பட்டாஸ்.இந்த திரைபடம்  ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. மேலும் தனுஷ் தொடர்ச்சியாக அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கையில் இன்னும் பல திரைப்படங்கள் வைத்துள்ளார்.

இந்தநிலையில் பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் கர்ணன் திரைப்படத்தில் நடித்து வருகிறார், அதுமட்டுமில்லாமல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ரிலீஸ்க்காக காத்துக் கொண்டிருக்கிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய திரைப்படத்திற்கு சுருளி என டைட்டில் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, ஆனால் இன்னும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட வில்லை, இந்த நிலையில் படத்தை வருகிற மே 1ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மே மாதம் 1 ம் தேதி தல அஜித்தின் பிறந்த நாள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அன்று தனுஷ் திரைப்படம் ரிலீஸ் ஆவதால் இருதரப்பு ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Leave a Comment