அஜித்,சிம்பு உடன் ஜாலியாக பேசும் விவேக் ரசிகர்களை கண்கலங்க வைக்கும் புகைப்படம்.!

தமிழ் திரை உலகில் எத்தனை காமெடி நடிகர்கள் வலம் வந்தாலும் ஆனால் மக்கள் மனதில் அப்படியே மறையாமல் இருக்கும் நடிகர் என்றால் அது விவேக் தான் இவர் நேற்று மாரடைப்பு காரணமாக அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு இந்த மண்ணை விட்டு மறைந்து விட்டார் மேலும் இவரது இழப்பு தாங்க முடியாமல் விவேக்கின் குடும்பத்தினர் தவித்து வருகிறார்கள்

அதுமட்டுமல்லாமல் இவர் சினிமா துறையில் நண்பர்களாக பழகி வந்த பல பிரபலங்களும் இவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையாக சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்கள்,வீடியோக்கள் என அனைத்தும் வெளியிட்டு தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தி வந்தார்கள் ஒரு சில நடிகர்கள்,நடிகைகள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விவேக் எந்த  திரைப் படத்தில் நடித்தாலும் அந்த திரைப்படத்தில் மக்களுக்கு சமூக அக்கறை காட்டும் வகையில் ஒரு கருத்தை கூறியிருப்பார் இவ்வாறு இவர் நடித்த எல்லா திரைப்படங்களிலும் கூறியதன் மூலம் இவருக்கு சின்ன கலைவாணர் என்ற பட்டத்தையும் ரசிகர்கள் கொடுத்துவிட்டார்கள்.

மேலும் விவேக்கின் நெருங்கிய நண்பரான வடிவேலு விவேக் இறப்பு குறித்து என்னால் வர முடியவில்லை என்று ஒரு வீடியோ காணொளியை சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருந்தார்.இந்நிலையில் விவேக் சினிமாவில் பல நண்பர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார் அந்த வகையில் விவேக் மற்றும் அஜித்,சிம்பு ஆகிய மூவரும் ஒரு காலத்தில் ஒன்றாக இணைந்து உட்கார்ந்திருக்கும் போது எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

simbu
simbu

மேலும் இந்த புகைப்படத்தில் அஜீத்தும் சிம்புவும் இளமையாக இருக்கிறார்கள் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமாக தெரிகிறது.அதுமட்டுமல்லாமல் விவேக்கின் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் தற்போது ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment