அஜித், விக்னேஷ் சிவன் இணையும் திரைப்படத்திற்கு வில்லனாக அரவிந்த் சாமியா.? போடு தகிட தகிட ரசிகர்கள் கொண்டாட்டம்..

அஜித் தற்பொழுது துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது ரசிகர்கள் இந்த திரைப்படத்தின் ரிலீஸ்காக மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் போன்றவை வெளியாகி ரசிகர்களை பெரிதளவில் உற்சாகப்படுத்தியது.

இப்படிப்பட்ட நிலையில் நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் அஜித் நடிக்க இருக்கும் 62ஆவது திரைப்படத்தினை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. எனவே இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்காலிகமாக இந்த படத்திற்கு ஏகே 62 என பெயர் வைத்துள்ள நிலையில் இந்த படத்தின் நடிப்பதற்கான நடிகர்கள் தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அஜித் நடிக்க இருக்கும் 62ஆவது படத்தில் நடிகர் அரவிந்த்சாமி வில்லனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது எனவே ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடங்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்பொழுது அஜித் துணிவு திரைப்படத்தில் நடித்த முடித்துள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகிறார்கள் அதற்கு முக்கிய காரணம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு இரண்டு திரைப்படங்களும் போட்டி போட இருக்கிறது.

எனவே எந்த திரைப்படம் பெஸ்ட் என பார்க்க ரசிகர்கள் காத்து வருகிறார்கள். துணிவு திரைப்படம் பேங்க் கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள நிலையில் ஏகே 62 எப்படிப்பட்ட கதை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை திர்ஷா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment