விடாமுயற்சி படத்துக்கு ரெடியான அஜித், த்ரிஷா.? புதிய லுக்கில் எப்படி இருக்கிறார்கள் பாருங்கள்

Ajith : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து ஓடிக்கொண்டிருப்பவர் அஜித்குமார். இவர் நடிப்பில் வரும் படங்களில் ஆக்சன் படங்களாக இருந்தாலும் அதேசமயம் சமூக அக்கறை கருத்துக்கள் அதிகம் இடம்பெறுகின்றன. அதனால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியேன்ஸ் படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில்  கடைசியாக வெளியான துணிவு திரைப்படம்  மக்கள் மற்றும் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர் படம் 230 கோடி வெற்றி கண்டது அடுத்து லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிப்பதாக அஜித்தின் பிறந்தநாளான மே ஒன்றாம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பல மாதங்கள் ஆகியும் எந்த தகவல்கள் எதுவும் அதிராகபூர்வ தகவல் வெளிவரவில்லை என்றாலும் விடாமுயற்சி படம் குறித்து சில தகவல்கள் இணையதள வைரல் ஆகுவது உண்டு. அதன்படி விடாமுயற்சி படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கும் என்றும், படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், அர்ஜுன் தாஸ், ஹுமா குரேஷி, பிக்பாஸ் ஆரவ் போன்றவர்கள் நடிக்க இருப்பதாகவும் பேச்சுக்கள் மட்டும் வெளி வருகின்றன

ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.. இப்படி இருந்தாலும் விடாமுயற்சி படத்திற்கான எதிர்பார்ப்பு மட்டும் ரசிகர்கள் மத்தியில் துளிகூட குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இப்படியான சூழ்நிலையில் ரசிகர்கள் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு அட்டகாசம் பண்ணி வருகின்றனர்.

அந்த வகையில் ரசிகர் ஒருவர் அஜித் மற்றும் திரிஷாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் இதுதான் விடாமுயற்சி படத்தில் அஜித் மற்றும் த்ரிஷா லுக்கா என கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்.

Ajith and trisha
Ajith and trisha