அஜித்துடன் இணைந்த தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகர் தமிழ்.! வைரலாகும் புகைப்படம்.

vidaamuyarchi and thamizhum saraswathiyum :  நடிகர் அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தின் டைட்டில் வெளியானதில் இருந்து இன்று வரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் படம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் சமீபத்தில் மகிழ்திருமேனி தன்னுடைய சமூக வலைத்தளத்தின் விடாமுயற்சி திரைப்படம் விரைவில் தொடங்குகிறது என அறிவித்திருந்தார்.

மேலும் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடிக்கப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. அது மட்டும் இல்லாமல் பிக் பாஸில் கலந்து கொண்ட ஆரவ் விடாமுயற்சி திரைபடத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.

அதுமட்டுமில்லாமல் அஜித் மோகன்லால் அவர்களை சந்தித்துள்ளார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகிய வைரலானது, அவரை தொடர்ந்து பாலிவுட்ல பிரபல நடிகராக வலம் வரும் சஞ்சய் தத் அவர்களை அஜித் சந்தித்துள்ளார் இப்படி ஒவ்வொரு பிரபலமாக அஜித் சந்தித்து வருவதால் அவர்கள் எல்லாம் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க போகிறார்களா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது.

ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பையும் படக்குழு வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது இந்த நிலையில் அஜித் சீரியல் நடிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவர் வேறு யாரும் கிடையாது விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறார்கள்.

thamizhum saraswathiyum serial actor with ajith
thamizhum saraswathiyum serial actor with ajith

இந்த சீரியலில் கதாநாயகனாக தமிழ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தீபக்  என்ற நடிகர் இவர் சமீபத்தில் அஜித்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது இந்த புகைப்படம் சென்னையில் பிரபல ஹோட்டல் ஆன ஹில்டன் ஹோட்டலில் தான் எடுக்கப்பட்டது. இவர்களுடன் பிரபல ஆங்கர்  இருக்கிறார்.

thamizhum saraswathiyum serial actor with ajith
thamizhum saraswathiyum serial actor with ajith

இதோ அந்த புகைப்படங்கள்.

thamizhum saraswathiyum serial actor with ajith
thamizhum saraswathiyum serial actor with ajith