வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடித்த திரைப்படம் துணிவு படம் முழுக்க முழுக்க பணத்தை மையமாக வைத்து உருவாகி இருந்தது. இதில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், ஜி பி முத்து மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.
படம் கடந்த 11ம் தேதி கோலாகலமாக திரையரங்கில் வெளியானது. படம் தொடர்ந்து நல்ல விமர்சனத்தை பெற்று வருவதால் துணிவு படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதுவரை அஜித்தின் துணிவு திரைப்படம் 42 கோடி வசூல் செய்துள்ளது. வருகின்ற நாட்களில் துணிவு படத்தின் வசூல் அதிகரிக்கும் என தெரிய வருகிறது.
இதனால் அஜித்தும் சரி, படக்குழுவும் சரி செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அஜித் தனது 62வது திரைப் படத்தில் நடிக்க இருக்கிறார். விக்னேஷ் சிவன் படத்தை இயக்க இருக்கிறார். AK 62 முழுக்க முழுக்க ஆக்சன் இல்லாத ஒரு திரைப்படமாக உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் பற்றிய செய்து ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித்குமார் ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அன்று இருந்து இன்று வரை ஷாலினியை நல்லபடியாக பார்த்து வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். இப்பொழுதும் அஜித் ஷாலினி மீது பாசம் குறையாத அளவிற்கு நடந்து கொள்கிறார். தொடர்ந்து இவர்களுடைய புகைப்படங்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன இந்த நிலையில் ஷாலினி மடியில் அஜித் உட்கார்ந்த அரிய புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.
