அஜித்தை கடுப்பேற்றிய தயாரிப்பாளர்.! உங்க சகவாசமே வேண்டாம் என கூறிய தல அஜித்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தல அஜித். அதேபோல் தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நடிகராக இருப்பவர் அஜித்தை நம்பி கோடி கோடியாக பணத்தை கொட்டி படம் எடுக்க பல தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள்.

இந்த நிலையில் அஜித்தின் நம்பிக்கைக்குரிய தயாரிப்பாளர் அவர் முதுகில் குத்தியது அஜித்திற்கு பெரும் மன உளைச்சலை கொடுத்தது. அவர் வேறு யாருமல்ல ஏஎம் ரத்னம் தான். ஏ எம் ரத்தினத்தை தெரியாதவர்கள் யாரும் இல்லை. ரத்தினத்தின் மேல் உள்ள நம்பிக்கையால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ரத்தினத்தை தல அஜித் எண்ணை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் மீண்டும் தயாரிப்பாளராக நிலைநாட்டினார்.

ஆனால் ரத்தினமும் அஜித்தை வைத்து பணம் சம்பாதிப்பதில் குறியாக இருந்தார் என சினிமா வட்டாரத்தில் கூறுகிறார்கள். மேலும் அஜித்தின் பெயரை வைத்து இவர் பல பிசினஸ் செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ரத்தினம் அஜித்திற்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தில் சுமார் 68 லட்சம் டிடிஎஸ் தொகையை கட்டாமல் விட்டுவிட்டார் என கூறுகிறார்கள்.

இதனால் அதன் நோட்டீஸ் நேராக அஜித் வீட்டிற்கு சென்றுள்ளது இதைப் பார்த்த அஜித் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் ரத்தினம் மீண்டும் அஜித்தை வைத்து படம் தயாரிக்கலாம் என நினைத்தார் ஆனால் அஜித்தோ நிரந்தரமாக இனி நடிக்கவே முடியாது என குட் பாய் சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment