அஜித், தனுஷை ட்விட்டர் பக்கத்தில் பங்கமாக கலாய்த்து பிரபல நடிகர் – கொந்தளித்த ரசிகர்கள்.

0
ajith and dhanush
ajith and dhanush

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் தனுஷ் இவர்கள் இருவரும் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்து உள்ளனர். இவர்கள்  இருவரும் வெற்றிகரமாக  ஒருபக்கம்  ஓட.. மறுபக்கம்  சமூக வலைதள பக்கங்களில் அஜித், தனுஷ் ரசிகர்கள் படத்தின் வெற்றி மற்றும்  புதிய  பர்ஸ்ட் லுக் போஸ்டர் போன்ற புகைப்படங்களை வெளியிட்டு கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இப்படி நல்ல விதமாக  போய் கொண்டு இருந்தாலும், அவ்வபோது ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் சண்டை போட்டுக் கொள்வதும் உண்டு.. ரசிகர்கள் தான் இப்படி என்றால் வளர்ந்து வரும் நடிகர்கள் பலருமே பல முன்னணி நடிகர்களை கிண்டலும் கேலியும் செய்திருக்கின்றனர். அப்படி ஜிவி பிரகாஷின் பழைய டுவிட்டர் பதிவுகளை பார்த்தால் பல முன்னணி நடிகர்களை கிண்டலும் கேலியும் செய்திருக்கிறார்.

அதிலும் தனுஷை வச்சி செய்துள்ளார் ஜிவி பிரகாஷ் அது குறித்து விழா வாரியாக பார்ப்போம். தனுஷை பகைத்துக் கொண்டதால் தான் ஜி வி பிரகாஷுக்கு சனி பிடிச்சிருக்கு என்று தனுசு ரசிகர் ஒருவர் டேக்  செய்திருக்கிறார். அதற்கு ஜி.வி பிரகாஷ் அதுக்கப்புறம் தான் என் சம்பளம் இரண்டு மடங்கானது, அதன் பிறகு தான் ஹீரோ ஆனேன், என் சிப்ஸ் என்று பங்கம் செய்திருக்கிறார். தனுசு ரசிகர் ஒருவர் குள்ள பயலே என திட்டி இருக்கிறார் அதற்கு எலும்பா! எடுத்துட்டு இடுப்புல வச்சுப்பீங்களா என்று கூறியுள்ளார்.

தனுஷை தான் இப்படி வச்சு செய்தார் என்று பார்த்தால் அஜித்தையும் அப்படி வச்சி செய்திருக்கிறார் அஜித் ரசிகர் ஒருவர் பழையபடி மியூசிக் போ  என சொன்னதற்கு நீங்க பழையபடி பைக் பைக் ரேஸுக்கு போயிடுங்க என கிண்டல் அடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அதையும் தாண்டி  அஜித்தை மற்றொரு டுவிட்டர் பக்கத்தில் ஆமை என்றும் விமர்சித்து உள்ளார் ஜிவி பிரகாஷ்.  இப்படி தொடர்ந்து ஜி.வி பிரகாஷ் அஜித் மற்றும் தனுஷ் ரசிகர்களை வேண்டுமென்றே கிண்டலடித்துள்ளார்.

g.v. prakash
g.v. prakash

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரைப் போலவே பிரிதிபரங்கநாதன் பழைய ட்விட்டர் பக்கத்தை பற்றி சர்ச்சை கிளம்பிய போது அவற்றுள் சில உண்மையானவை என்றும் சில பொய்யான போட்டோஷாப் செய்யப்பட்டவை என்றும் விளக்கம் அளித்தார் அதேபோல ஜிவி பிரகாசம் விளக்கம் அளிக்க வேண்டும் என தனுஷ் மற்றும் அஜித் ரசிகர்கள் காட்டமாக கேட்டு வருகின்றனர்.

g.v. prakash
g.v. prakash