அஜித்தின் மகள் மற்றும் மகனின் ஒரே ஒரு செல்பி.! ஸ்தம்பித்து போன இணையதளம்.!

0

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் தல அஜித், மேலும் அவருக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர் கூட்டம் இருக்கிறது, அது மட்டுமில்லாமல் சினிமாவில் இருக்கும் பிரபலங்களும் இவரின் ரசிகர்களாக இருக்கிறார்கள்.

அதேபோல் அஜித்துடன் நடிக்க வேண்டும் என பல நடிகைகள் மற்றும் நடிகர்களுக்கு ஆசை இருக்கிறது, தல எப்பொழுதும் பொறுமையாகவும் எளிமையாகவும் இருப்பவர் தற்பொழுது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் அஜித்திற்கு சினிமா துறையில் மட்டுமல்லாமல் பைக் ரேஸ், கார் ரேஸ், அறிவியல், விளையாட்டு என அனைத்துத் துறையிலும் தனது திறமையை செலுத்தி வருகிறார்.

சமீபத்தில்கூட துப்பாக்கி சுடும் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார், தல அஜித் அமர்க்களம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அனோஸ்கா, ஆத்விக் என இரு குழந்தைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகிய ஷாலினி தற்போது தனது கணவருடன் துணையாக இருப்பதும் குழந்தைகளை வளர்ப்பதிலும் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தான் அஜித்தின் மகன் மற்றும் மகள் ஒன்றாக எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது, இதைக்கண்ட அஜித் ரசிகர்கள் தீயாய் ஷேர் செய்து வருகிறார்கள்.