அஜித்திற்கும் அகில இந்திய சூப்பர் ஸ்டார் சிவாவிற்கு இப்படி ஒரு உறவு முறையா.? அட இது தெரியாம போச்சே நீங்களே பாருங்கள்.!

அகில இந்திய சூப்பர் ஸ்டார் என்று தமிழ் மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர் சிவா, இவர் தன்னுடைய டைமிங் காமெடிகளாலும் எதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தார், சிவா சினிமாவிற்கு வருவதற்கு முன்பு ரேடியோ மிர்ச்சியில் வேலை செய்து வந்தார், பின்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 600028 என்ற திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

ஆனால் இதற்கு முன் இவர் ஜீவா இயக்கத்தில் வெளியாகிய 12B என்ற திரைப்படத்தில்  நடிகர் ஷாம் நண்பனாக நடித்து இருந்தார், அதுமட்டுமில்லாமல் ஆளவந்தான் திரைப்படத்திலும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இப்படி நடித்துவந்த சிவா வெங்கட்பிரபுவின் சரோஜா என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இவரின் நடிப்பையும் கலகலப்பான பேச்சையும் பார்த்து நடிகர் மற்றும் இயக்குனரான சுந்தர்சி இவரை வைத்து கலகலப்பு திரைப்படத்தை இயக்கினார், அந்த திரைப்படம் ஹிட் அடைத்ததால் சிவாவை வைத்து தமிழ் படம் என்ற திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார்கள் இந்த திரைப்படம் பல திரைப்படங்களை கலாய்த்து எடுக்கப்பட்டதால் மாபெரும் வெற்றி அடைந்தது வசூலிலும் சக்கை போடு போட்டது.

அதன்பிறகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மனைவி இயக்கிய வணக்கம் சென்னை திரைப்படத்தில் ஹீரோவாக சிவாவும் ஹீரோயினாக ப்ரியா ஆனந்தும் நடித்திருந்தார்கள், இந்த திரைப்படத்தில் அனிருத் தான் இசையமைத்தார், பாடல்கள் அனைத்தும் செம ஹிட் அடைந்து படமும் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் அகில இந்திய சூப்பர் ஸ்டார் சிவாவின் திருமண புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது, சில வருடங்களுக்கு முன்பு நேஷனல் லெவல் பேட்மிட்டன் வீராங்கனையை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சிவா, அகில இந்திய சூப்பர் ஸ்டார் சிவா ஒருவிதத்தில் அஜித்திற்கு சொந்தமாம் அதனால் தான் அவருடைய திருமணத்தையே தலைமை தாங்கி நடத்தி வைத்ததாக தகவல் வெளியானது.

இதோ அவரின் திருமண புகைப்படங்கள்.

siva ajith
siva ajith
siva ajith
siva ajith
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment