ஏகே 62 படப்பிடிப்பு எப்பொழுது தெரியுமா.? வெளியான மாஸ் அப்டேட்..

நடிகர் அஜித் துணிவு திரைப்படம் தற்பொழுது மிகப்பெரிய வெற்றினை பெற்றுள்ள நிலையில் இதன் அடுத்து ஏகே 62 திரைப்பட அறிவிப்புக்காக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர். அஜித்தின் 62வது திரைப்படத்தினை விக்னேஷ் சிவன் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியான நிலையில் திடீரென ஏகே 62வில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார்.

எனவே இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சனை ஏற்படுத்திய நிலையில் அடுத்ததாக யார் ஏகே62 திரைப்படத்தின் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. அந்த வகையில் ஆக்சன் படங்களை இயக்கி வரும் மகிழ் திருமேனி அஜித் உடன் கதை கூறியதாக அண்மையில் வெளியானது.

எனவே இவர் கூறிய தகவல் அஜித்துக்கு மிகவும் பிடித்தது விட்டதாகவும் மகிழ்த்திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிக்க இருப்பதாக சில தகவல்கள் வெளியான நிலையில் பிறகு மகிழ் திருமேனியை அஜித் சந்தித்த புகைப்படங்களும் இணையதளத்தில் கசிந்தது ஆனால் இதற்கான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் தள்ளிப் போட்டு வருகிறது.

ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் அறிவிப்புக்காக காத்து வரும் நிலையில் பட குழுவினர்கள் ஏகே 62 அறிவிப்பை வெளியிட உள்ளது. மேலும் முதன்முறையாக அஜித் மற்றும் மகிழ்திருமேனி இவர்களுடைய கூட்டணி எப்படி இருக்கும் என்பதினை பார்ப்பதற்காக ரசிகர்கள் காத்து வருகின்றனர். அஜித் நடிக்க இருக்கும் இந்த படத்திற்காக கண்டிப்பாக மகிழ்திருமேனி தரமான கதையை தான் வைத்திருப்பார்.

இப்படிப்பட்ட நிலையில் மார்ச் மாதத்தில் ஏகே 62 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனவும், 120 நாட்களிலேயே இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க பட குழுவினர்கள் திட்டமிட்டு உள்ளார்களாம். எனவே வருகின்ற தீபாவளியை முன்னிட்டு ஏகே 62 படம் ரிலீஸ்சாக அதிக வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றனர். எனவே இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிடப்பட குழுவினர்கள் இருக்கின்றனர்.

Leave a Comment

Exit mobile version