மீண்டும் ஒரு மங்காத்தா கதாபாத்திரத்தில் தல அஜித்.! வினோத் போடும் மாஸ்டர் பிளான்.!

தல அஜித் தற்பொழுது போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் அப்டேட்டிக்காக  ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் இதற்கு முன்பு தல அஜித் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது அதனால் வலிமை திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெறும் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் வலிமை திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் மிகவும் பிரமாண்டமாக வெளியாகும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். மேலும் இந்த திரைப்படத்தில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் அஜித் பைக் ரேஸ் காட்சிகள் மற்றும் கார் சேசிங் காட்சிகள் என பின்னி பெடல் எடுத்து உள்ளார் என கூறப்படுகிறது.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது ஏனென்றால் வலிமை திரைப்படம் எதிர்பார்த்த நேரத்தில் வெளியிட முடியாமல் போனதால் இந்த திரைப்படத்தை விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக  அஜித்தின் வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது.

ajith
ajith

இந்த நிலையில் அஜீத் நடிக்கும் புதிய திரைப்படத்தின் கதை அம்சம் தற்போது கசிந்துள்ளது. அஜித் இந்தத் புதிய திரைப்படத்தில் மங்காத்தா கதாபாத்திரத்தில் நடித்தது போல் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏனென்றால் அஜித் இதற்கு முன்பு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்த பில்லா மங்காத்தா ஆகிய திரைப்படங்கள் மாபெரும் ஹிட்டடித்தது.

அந்தவகையில் இந்த திரைப்படமும் மாபெரும் ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அதனால் இந்த திரைப்படம் நெகட்டிவ் கதாபாத்திரமாக அஜித்திற்கு அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment