அஜித் அதிரடி முடிவு ஆடி போனா வலிமை படக்குழு.!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித்.  இவர் நடிப்பில் இறுதியாக நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளிவந்தது. இத்திரைப்படம்  ஹிந்தியிலிருந்து ரீமேக் செய்யப்பட்டதாகும். அந்த வகையில் தமிழில் இத்திரைப்படத்தை ஹெச் வினோத் இயக்கியிருந்தார்.

இத்திரைப்படம் பெண்களை மையமாக வைத்து சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை உணர்த்தியதால் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதுமட்டுமல்லாமல் இத்திரைப்படத்தில் நடித்திருந்த ஒவ்வொரு கேரக்டரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்கள்.

இத்திரைப்படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் எந்த திரைப்படமும் வெளிவரவில்லை . ஏனென்றால் இவர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தன் கவனத்தை செலுத்தி வருகிறார் அந்த வகையில் தங்கப் பதக்கத்தையும் தட்டிச் சென்றார். அந்த வகையில் ஒரு வருடத்திற்கு மேலாக அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் மட்டும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இத்திரைப்படத்தை போனிகபூர் இயக்க ஹெட்ச் வினோத் தயாரிக்கிறார்.  இதைத் தவிர வேறு எந்த தகவலும் வெளி வராத காரணத்தினால் ரசிகர்கள் போகுமிடமெல்லாம் வலிமை அப்டேட் கொடுங்கள் என்று போராடி வந்தார்கள். அந்தவகையில் இத்திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் ஹீமா குரோஷி நடிக்க உள்ளதாகவும் வலிமை திரைப்படத்தின் சண்டை காட்சிகள் வெளிநாட்டில் எடுக்க உள்ளதாகவும் கூறியிருந்தார்கள்.

அதோடு திரைப்படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது எனவே விரைவில் ரிலீஸ் ஆகும் என்று கூறியிருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்போது கொரோனா தாக்கத்தால் படப்பிடிப்புகள் ஓரளவிற்கு முடக்கப்பட்டுள்ளது.

ஏனென்றால் பல நடிகர்,நடிகைகளுக்கு கொரோனா தொற்று  உறுதியாகி உள்ளது. இந்நிலையில் வலிமை திரைப்படத்தை மட்டும் நம்பினால் போதாது என்று அஜீத் தனது 61வது திரைப்படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் என்ற  அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது.

அந்த வகையில் ஏற்கனவே அஜித்திடம் ஸ்கெட்ச் வினோத் ஒரு திரைப்படத்தின் முதல் வரியை மட்டும் சொல்லி இருந்தாராம் தற்போது அதனை முழுமையாக கூறி அந்தத் திரைப்படத்திற்கு அஜித் ஒப்பந்தமாகியுள்ளார்.இத்திரைப்படம் ஜூலை மாதம் துவங்க உள்ளதாகவும் ஆனால் தயாரிப்பாளர் கண்டிப்பாக போனிகபூர் இல்லை என்றும் கூறியுள்ளார்கள்.

இதற்கு முன்பே கோபுரம் பிலிம்ஸ் அஜித்திடம் இருந்து  கால்ஷீட்டை  வாங்கி விட்டதாக தகவல் வந்தது எனவே அஜித்தின் 61-வது திரைப்படத்தை யார் தயாரிப்பாளர் என்ற தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவர வில்லை. ஆனால் கண்டிப்பாக ஜூலை மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக கூறி உள்ளார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment