சினிமா போர் அடிச்சிருச்சு அரசியலுக்கு போலாமா அஜித் அதிரடி.!

0

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித். பொதுவாக இவர் நடிப்பில் வெளிவரும் பெரும்பாலான திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று விடும்.  இந்நிலையில் இவர் நடிப்பில் கடைசியாக நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இத்திரைப்படத்திற்கு பிறகு ஒரு வருடத்திற்கு மேலாகியும் இவர் நடிப்பில் எந்த திரைப்படமும் வெளிவரவில்லை ஏனென்றால் இவர் சினிமாவையும் தாண்டி துப்பாக்கி சுடுதல், பைக்ரேஸ் ,சிறிய ரக விமானம் தயாரித்தல் போன்ற இன்னும் பல அறிவியல் சம்பந்தமான விஷயங்களிலும் தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார்.

இதன் காரணமாகத் தான் தற்பொழுது நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இதனால் தான் இவரின் முழுக்கவனத்தையும் துப்பாக்கி சுடுதல் போட்டியில்  செலுத்தி வந்ததால் சினிமாவில் திரைப்படங்களில் நடிக்க முடியாமல் போனது.

இந்நிலையில் ஒரு வருடத்திற்கும் மேலாக இவர் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆனால் இத்திரைப்படம் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஹீமா குரோஷி நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தது.

அதன் பிறகு அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு மே ஒன்றாம் தேதி இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று கூறியிருந்தார்கள். இப்படி ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வந்த நிலையில் மீண்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகாது என்று கூறிவிட்டார்கள்.

இருந்தாலும் ரசிகர்கள் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இத்திரைப்படத்தின் ரிலீசுக்காக காத்து வருகிறார்கள். இந்நிலையில் தல அஜித் தற்பொழுது சில வருடங்களாக பத்திரிக்கையாளர்களை சந்திப்பதில்லை  இதற்கு முன்பு பத்திரிக்கையாளர்களை கடைசியாக சந்தித்த பொழுது சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்த விடவா என்று கூறிவுள்ளார்.