வேற ஏதாவது கதை இருக்கா..? இது கண்டிப்பா தோல்வி தான் என தெரிந்தும் நடித்துக் கொடுத்த அஜித்.! வெளிப்படையாக கூறிய இயக்குனர்..

இந்த வருட ஆரம்பத்தில் அஜித்திற்கு துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது அப்படி இருக்கும் நிலையில் அஜித் அடுத்ததாக யார் திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது இந்த நிலையில் அவரின் பிறந்தநாள் தினமான மே 1ஆம் தேதி அதிகாரப்பூர் அறிவிப்பும் வெளியானது.

அதாவது லைக்கா நிறுவனம் அஜித் திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் மகிழ் திருமேனி இயக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்தது ஆனால் இதற்கு முன்பு விக்னேஷ் சிவன் அஜித் திரைப்படத்தை இயக்க இருப்பதாக அதிகார பூர்வ தகவல் வெளியானது ஆனால் அவர் கதை ரெடி செய்வதில் தாமதமானதால் அஜித் மகிழ்திருமேனி திரைப்படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டார்.

அஜித் திரைப்படத்தை மகிழ் திரைமேனி இயக்க போகிறார் என்ற தகவல் வெளியானதோடு சரி அதன் பிறகு எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் அஜித் இந்த திரைப்படம் தோல்வியடையும் என தெரிந்தே நடித்த சம்பவம் தற்பொழுது வெளியாகி ரசிகர்களுடைய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி இவர் அஜித்தை வைத்து ஜி என்ற திரைப்படத்தை இயக்கினார் அஜித் அவர்களுக்கு முதன்முறையாக அரசியல் திரைப்படமாக அமைந்தது ஆனால் இந்த திரைப்படத்திற்கு எந்த ஒரு வரவேப்பும் கிடைக்கவில்லை.

லிங்குசாமி கதையில் இந்த திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது சித்தார்த் தான். அவரை நினைத்து தான் கதையை எழுதியுள்ளார் லிங்குசாமி ஆனால் அவர் நடிக்க மறுத்துள்ளதால் அடுத்ததாக அஜித்திடம் சென்றுள்ளார் ஆனால் அஜித் அந்த கேரக்டர் பண்ண கூடாது என்று நினைத்து தான் லிங்குசாமி சென்றுள்ளார் ஆனால் கடைசியில் அஜித் நடிப்பதாக உறுதி செய்துவிட்டார்.

ஜி திரைப்படத்தில் அஜித் கல்லூரி மாணவனாக நடித்திருப்பார் இந்த திரைப்படத்தின் கதாபாத்திரம் தனக்கு செட் ஆகாது என்று நினைத்து வேறு கதை இருக்கிறதா என லிங்குசாமி அவர்களிடம் கேட்டுள்ளார் ஆனால் ஜி திரைப்படத்தின் சூட்டிங் முதல் நாள் தான் இந்த கதையை முழுமையாக அஜித் கேட்டுள்ளார் அதன் பிறகு தான் லிங்குசாமியிடம் அஜித் வேறு கதை கேட்டுள்ளார் இந்த திரைப்படம் தனக்கு சரியாக வராது எனவும் கூறிவிட்டாராம்.

அப்படி அஜித் நடிப்பதற்கு முன்பு இந்த திரைப்படம் தனக்கு சரியாக வராது எனக் கூறி விட்டதால் அந்த திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment