அஜித் நடித்த ஆசை படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான்.! இதோ இயக்குனரே கூறிய தகவல்

0
aasai
aasai

1995 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாகி திரைப்படம் ஆசை, இந்த திரைப்படத்தில் சுபலட்சுமி அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் 1995-ம் ஆண்டு சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான விருதை பெற்றது.

படத்தை வசந்த் இயக்கியிருந்தார் மணிரத்னம், ஸ்ரீராம் ஆகியோர் தயாரித்திருந்தார்கள், தேவா இசையமைத்த இந்த திரைப்படத்திற்கு ஜீவா ஒளிப்பதிவு  செய்தார். இந்த திரைப்படத்தில் அஜித் நடிக்கும் போது அவருக்கு தல என்ற பெயரே கிடையாது சாதாரண ஒரு நடிகர்தான்.

வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டும் என மிகவும் கஷ்டப்பட்டார். ஆசை திரைப்படம் வந்து 25 வருடங்கள் கடந்த நிலையில் இயக்குனர் வசந்த் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஆசை படம் பற்றி பேசினார்.

அப்பொழுது அவர் ஆசை படத்தில் முதலில் அஜித்தை கமிட் செய்து விட்டோம் என்று பெப்சி விளம்பரத்தில் நடித்த கௌரி என்ற பெண்ணை தான் ஹீரோயினாக கமிட் செய்து போட்டோ ஷூட் கூட எடுத்து விட்டோம் ஆனால் அந்த பெண்ணின் முகத்தில் வெகுளித்தனம் இல்லை அதனால் அவரை கமிட் செய்ய வில்லை ஏனென்றால் இந்த திரைப்படத்திற்கு மிக மிக அவசியம் வெகுளித்தனம்.

அதன் பிறகு இந்தத் திரைப்படத்துக்காக கொல்கத்தாவில் ஒரு ஹீரோயினை பார்த்து கமிட் செய்தாராம் அவர்தான் சுபலட்சுமி என கூறினார்.