இரண்டு பாலிவுட் ஹீரோயின்களுடன் நடிக்கப்போகும் அஜித் – 61 வேற லெவலில் இருக்கும் போல..

0
ajith
ajith

நடிகர் அஜித்குமார் வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் எச். வினோத்துடன் கைகோர்த்து தனது 61 வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இந்த திரைப்படத்தின் கதைக்காக நடிகர் அஜித்குமார் உடல் எடையை அதிரடியாக குறைத்துள்ளார்.

அதன் புகைப்படங்கள் கூட வெளிவந்து ரசிகர்களை துள்ளல் ஆட்டம் போட வைத்துள்ளது. இந்த படத்தின் பூஜை நாளை போடப்பட்டு வெகுவிரைவிலேயே படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக அஜித் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் பாலிவுட் நடிகைகளே ஜோடியாக நடிக்கின்றனர்.

அந்த வகையில் அஜித்தின் 61 வது திரைப்படத்திலும் பாலிவுட் நடிகையாக இருக்க தான் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் அஜித்துடன் இப்பொழுது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப் படத்தில் நடித்த நடிகை தபு தற்போது அஜித்தின் 61 வது திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதே சமயம் மற்றொரு நடிகையான அதிதி ராவ் ஜோடி சேர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் இருக்க இன்னொரு ஹிந்தி நடிகை உடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எந்த நடிகையை படக்குழு தட்டி தூக்கும் என தெரியவில்லை. ஆனால் இந்த திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து பல்வேறு பிரகாஷ் போன்ற பல்வேறு டாப் நடிகர்கள் பலர் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித்தின் 61 வது திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான திரைப்படமாக இருக்கும் அதே சமயம் இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். இதனால் இந்த படத்தில் இரண்டு பாலிவுட் நடிகைகள் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.