நடிகர் அஜித் மற்றும் மஞ்சுவாரியர் போன்றவர்கள் இருக்கும் அஜித் 61 திரைப்படத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.!

0

தமிழ் சினிமாவில் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் ஃபேவரட் ஹீரோ நடிகர் அஜித்குமார் பல ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் நட்சத்திர நாயகனாகவும் விளங்கி வருகிறார். நடிகர் அஜித்குமார் அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை திரைப்படம் பிளாக்பஸ்டர் திரைப்படமாக ஹிட்டாகி வந்தது. அதைத்தொடர்ந்து நடிகர் அஜீத் குமாரின் ரசிகர்கள் அடுத்த திரைப்படத்திற்கு ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்குனர் நடிப்பில் நடித்த வலிமை திரைப்படத்தில் ஆக்சன் திரில்லர் படமாக அதில் அஜித் போலீஸ் அதிகாரியாகவும் எடுத்து வெளிவந்த அஜித்தின் வலிமை திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வந்தார்கள். அதற்கு முன்னதாகவே நேர்கொண்ட பார்வை& வலிமை என அடுத்தடுத்து திரைப்படங்களில் இனைந்துள்ளாா் . அஜித் குமார் மேலும் H. வினோத் இயக்கத்தில் ஏகே 61 மூன்றாவது திரைப்படம் என்று குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது வெறும் அஜித் மற்றும் ஹெச்.வினோத் கூட்டணி மட்டுமல்ல போனி கபூர், நீரவ்ஷா, அஜித்குமார், ஹெச். வினோத் எல்லோரும் இணைந்த ஒரு கூட்டணியாகும். மேலும் ஏகே 61 திரைப்படத்திற்கான அஜித்குமாரின் புதிய லுக் பெரிய எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படத்திற்காக சூட்டிங் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டு வருகிறது. இந்தத் திரைப்படமும் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து ஏகே 61 திரைப்படம் ஹைதராபாத்தில் முழுவீச்சில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மலையாள திரைப்பட நடிகை மஞ்சு வாரியர் ஏகே 61 திரைப்படத்தில் இணைந்து அஜித்குமார் உடன் முதல் முறையாக கதாநாயகியாக நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து அஜித் குமாரின் ரசிகர்கள் ஏகே 61 திரைப்படத்திற்கு ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

எனவே ஏகே 61 திரைப்படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் பற்றிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விமான ஓடுதளத்தில் ஏகே 61 படக்குழுவினருடன் அஜித் குமார் மற்றும் மஞ்சு வாரியர் இருக்கும் புதிய வீடியோ ஒன்றை தற்போது வெளியாகியுள்ளன. அந்த வீடியோ இணையதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஏகே 61 பிளாக்பஸ்டர் திரைப்படம் என்று எதிர்பார்க்கிறார்கள்.