தமிழ் சினிமாவில் ரெண்டு பெரிய நட்சத்திரங்கள் என்றால் அவர்களில் விஜய் மற்றும் அஜீத் ஆகியோர்கள் இடம் பிடிப்பார்கள் இவர்களுக்குள் நட்பு ரீதியாக பழக்கம் இருந்தாலும். தொழில் ரீதியாக போட்டி நிலவி கொண்டே தான் இருக்கிறது. இந்த நிலையில் தளபதி 66 திரைப்படத்திற்கான பூஜை சமீபத்தில் தொடங்கப்பட்டது இந்தப் பூஜையில் விஜய், ராஷ்மிகா மந்தனா சரத்குமார் என மிக முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
அதேபோல் அஜித் அவர்கள் 61வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது இந்தநிலையில் அஜித் 61 திரைப்படத்திற்காக ஹைதராபாத்தில் மிகப்பெரிய பிரம்மாண்டமான சென்னை மவுண்ட் ரோட் செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படக்குழு படத்தின் முதல் ஷெட்யூல் முடிப்பதற்காக ஹைதராபாத் செல்ல இருக்கிறது.

அந்தவகையில் நடிகர் அஜித்குமார் ஹைதராபாத் செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்றுள்ளார் அப்பொழுது அங்குள்ள விமான பணியாளர்கள் அஜீத்துடன் நின்று புகைப்படம் எடுத்துள்ளார்கள் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

மேலும் அஜித் 61 திரைப்படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்க இருக்கிறார் எனவும் ஒரு வேடம் நெகட்டிவ் ரோல் என்பதால் அதற்காக உடல் எடையை அதிரடியாகக் குறைத்து ஆளை மாறியுள்ளார். ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக அஜித் உடல் எடையை குறைத்த புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்தால் அஜித் தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார் இந்த திரைப்படத்தில் பேராசிரியராக நடிக்க இருக்கிறார் எனவும் கவின் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. எது எப்படியோ அஜித் 61 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
