அஜித் 61 படம் வேற லெவல் தான்… ரகசியத்தை இலைமறை காயாக கூறிய இயக்குனர் வினோத்.!

ajith 61 movie
ajith 61 movie

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் வலிமை இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வைரலாகி வருகிறது அது மட்டுமில்லாமல் விமர்சனங்களை தாண்டி வசூலில் சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்ததாக அஜித் வினோத் இயக்கத்தில் அஜித் 61 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அஜித்தின் இயக்குனர் வினோத் இந்த படம் குறித்து முக்கிய தகவலை கூறியுள்ளார்.

அதாவது அஜித் 61 திரைப்படத்தில் அஜித் பற்றிய முக்கிய ரகசியத்தை கூறியுள்ளார். அஜித் 61 திரைப்படத்தில் ஏற்கனவே நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அஜீத் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்பொழுது வினோத் ஒரு தகவலையும் கூறியுள்ளார். அதாவது அஜித் இந்த திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா என்ற கேள்விக்கு அதெல்லாம் சொல்ல முடியாது ஆனால் கண்டிப்பாக ஹீரோவும் அவர்தான் வில்லனும் அவர்தான் என கூறியுள்ளார்.

வினோத் அவர்கள் கூறிய இந்த தகவல் அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகும் இந்த திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், மோகன் லால், தபு, கவின் என பலர் நடிக்க இருக்கிறார்கள். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் வலிமை புயல் ஓயாத நிலையில் அடுத்த புயலை கிளப்பி விட்டார் வினோத் என ட்வீட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.