கேஜிஎப் பட நடிகர் AK61 படத்தில் நடிக்கிறாரா.! இதோ முழு தகவல்.

0

போனி கபூர் தயாரிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் AK61 படப்பிடிப்பு தொடங்கி தற்போது நடந்து வருகிறது. அஜித் குமார் தமிழ் சினிமா முன்னணி நடிகர்களில் ஒருவராகத் இருந்து வருகிறார். இவர் தனது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அஜித் குமார் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் சுமார் 200 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் அஜீத் குமாருடன் ஹெச் வினோத் மற்றும் போனி கபூருக்கு  இது மூன்றாவது  திரைப்படமாக அமைந்து வருகிறது.

அந்தவகையில் கேஜிஎப் படத்தில் நடித்த ஜான் கொக்கன் தற்போது ‘கப்ஜா’ என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று சமுக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அதில் நான் பணியாற்றும் தற்போதைய திரைப்படம் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ரொம்ப நாட்களாக இப்படி நடக்கவேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டு இருந்தேன். இதற்காக இறைவனிடம் நன்றி சொல்ல வேண்டும் என்று கூறினார். ஆனால் நடிகர் ஜான் அதை எந்த படம் என்று அவர் இதுவரைக்கும் குறிப்பிடவில்லை.

AK 61
AK 61

இந்த சூழலில் அஜித்தின் ரசிகர் ஒருவர் AK 61 வது படம் என போட்டு விடுங்கள் என பதிவிட்ட இருந்தார் அதற்கு ஜான் அவர் லைக் செய்து உள்ளார். நடிகர் ஜான் கொக்கன் அஜித்தின் 61-வது திரைப்படத்தில் பணி புரிவதை பற்றி  எந்த ஒரு அதிகாரப்பூர்வமான  தகவல்களும் வெளியிடவில்லை.