16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அஜித் திரைப்படத்தில் இணையும் பிரபல நடிகர்.! ஒருவேளை வில்லன் கதாபாத்திரமோ குழப்பத்தில் ரசிகர்கள்.!

அஜித் போனி கபூர் தயாரிப்பில் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை வினோத் அவர்கள் தான் இயக்கி உள்ளார். படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் கொரனோ மீண்டும் அதிகரித்ததால் வலிமை தேதி தள்ளிப்போனது.

இந்த நிலையில் வலிமை திரைப்படம் வருகின்ற மார்ச் மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தல அஜித் அடுத்ததாக 61 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

தல 61 திரைப்படத்தை மீண்டும் போனிகபூர் தான் தயாரிக்க இருக்கிறார் எனவும் இந்த திரைப்படத்தையும் வினோத் அவர்கள் தான் இயக்க இருக்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளன அதுமட்டுமில்லாமல் இந்த திரைப் படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் யார் என்ற தகவல் விரைவில் வெளியாகும்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தல 61 திரைப்படத்தில் யார் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமீபகாலமாக கசிந்து வருகிறது இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே போனிகபூர் அலுவலகத்தில் பிரகாஷ் ராஜ் அவர்கள் சென்று வந்த நிலையில் தற்பொழுது அஜித் 61 படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளன.

பிரகாஷ்ராஜ் அஜித்தின் ஆசை, ராசி மற்றும் பரமசிவம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் இந்த நிலையில் 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் நடிக்க இருக்கிறார் இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

prakash raj
prakash raj

Leave a Comment